பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 செளந்தர கோகிலம் நான் போகிறேன்” என்றான். அதைக் கேட்ட என் புருஷர் உடனே எழுந்து 'சரி ஒரு தவறும் செய்யாதிருக்கையில் எனக்கென்ன பயம். நான் போய்க் கேட்டுவிட்டு வருகிறேன். நீ இரு' என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டார். அவரைத் தனியாக அனுப்பிவிட்டு, நான் மாத்திரம் வீட்டில் இருக்க என் மனம் இசையவில்லை. ஆகையால், நானும் அவருடன் கூட வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். நாங்கள் இருவரும் அந்த ஜெவானுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். அவ்விடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருந்தார். அதற்குமுன் என் புருஷரைக் கைது செய்துகொண்டுபோன காலத்தில் ஏட்வேலை பார்த்தவரும் இன்ஸ்பெக்டர் ஆய்விட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். அந்த இன்ஸ்பெக்டர் என் புருஷரைப் பார்த்தவுடன் நிரம்பவும் கோபித்துத் தாண்டிக் குதித்து, "அடேய் நாய்ப் பயலே இதற்குமுன் இரண்டு தடவை ஜெயில் களி தின்று செக்கிழுத்தும், உனக்கு இன்னம் புத்தி வரவில்லையா? முதலில் வீட்டில் கன்னம் வைத்துத் திருடினாய், பிறகு நகை மூட்டையை அபகரித்தாய்; இப்போது ஒரு ஜதை ஆடுகளைத் திருடி சின்னதம்பி வாண்டையானிடம் விற்று உன்னுடைய திருட்டி கலியானத்துக்கு வேஷ்டி புடவை எல்லாம் வாங்கினாயாம். நீ உன் புத்தியை விடமாட்டாய் போலிருக்கிறது. நீ இனி இந்த ஊருக்குள்ளேயே தலை காட்டாமல் அடித்து விட்டால்தான் உன் கொட்டம் அடங்கும். அடேய்! யாரடா ஜெவான்கள், இந்தத் திருட்டு நாயை லாக்கப்பில் அடையுங்கள்' என்று சொல்லி என் புருஷருடைய துடையைப் பார்த்து ஒர் உதை கொடுத்தார். அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத என் புருஷர். 'அம்மாடி!' என்று சுருண்டு கீழே விழுந்துவிட்டார். உடனே மற்ற சேவகர்கள் வந்து கூடி அவரைப் பிடித்துக் கருங்கல் தரையில் போட்டுப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போய்ப் பக்கத்திலிருந்த ஒர் அறைக்குள் போட்டுப் பூட்டி விட்டார்கள். அந்த அக்கிரமத் தைக் கண்டு சகிக்கமாட்டாதவளாய் நான் வாய்விட்டுக் கதறி, ஐயோ! தெய்வமே என் புருஷர் ஒரு பாவத்தையும் அறியாத பரம ஸாதுவல்லவா. அவர் பேரில் அடாப்பழி சுமத்துகிறீர்களே! நீங்கள் rேமமாயிருப்பீர்கள்! உங்கள் பிள்ளை குட்டிகள்