பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதுர் 115 உங்களுக்கு உதவுமா? வேண்டாமையா இதுவரையில் எங்கள் குடியைக் கெடுத்தது போதும். நடந்து போனதோடு திருப்தி அடைந்து இவரை விட்டுவிடுங்கள். ஏழை அழுத கண்ணிர் சும்மாவிடாது; உங்களுடைய குலத்தை அடியோடு வேரறுத்து நாசம் பண்ணிவிடும். நிரபராதிகளான எங்கள் வயிறு எரிகிற மாதிரி நீங்கள் எரிந்துபோவதற்கு அதிக காலம் பிடிக்காது’ என்று சொல்லிப் புலம்பி யழ, அதைக்கேட்டு நிரம்பவும் கோபம் கொண்ட இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து நறநறவென்று பல்லைக் கடித்து, "போ பிள்ளை, வெளியில் மரியாதையாகப் போய்விடு. இங்கே இருக்கும் ஜெவான்கள் முரடர்கள். துணி துவைப்பதுபோல உன்னைப் போட்டுத் துவைத்துவிடுவார்கள். ஜாக்கிரதை, தாறுமாறான பேச்சைப் பேசினால், உன் முப்பத்திரண்டு பற்களையும் உடைத்து உன் கையில் கொடுத்து விடுவார்கள். மானங்கெட்ட பிசாசே போ வெளியில்; ஸ்டேஷ னுக்குள் நிற்காதே’ என்று அதட்டித் தாறுமாறாய் வையத் தொடங்கினார். அதைக் கேட்ட மற்ற ஜெவான்களும் என்னை அதட்டி என்மேல் கைபோட ஆரம்பித்தார்கள். நான் அதற்கு மேல் அங்கே இருக்கப் பயந்து, 'உங்களுக்கெல்லாம் ஐயனா ரப்பன்தான் கூலிகொடுக்க வேண்டும்' என்று சொல்விட்டு வெளியில் வந்துவிட்டேன். நாங்கள் முகூர்த்தநாள் ஏற்படுத்தி பதையும் அதே காலத்தில் என் புருஷர் கைதியானதையும் நினைக்க நினைக்க, என் வயிறு அகோரமாய்ப் பற்றி எரிந்தது. என் உடம்பு பதறியது. உயிர் பூலோகத்துக்கும் எமலோகத்துக்கு மாக ஊஞ்சாலடியது. ஆ! பாவி! நான் என்ன ஜென்மம் எடுத்தேன்! எத்தனையோ கோடி ஜனங்கள் நிறைந்த இந்த உலகத்தில் வேறு யாருக்காவது இப்படிப்பட்ட கதி, நேர்ந்ததா? எனக்கு மாத்திரமா இவ்விதமான விபரீதம் நேரவேண்டும் பாழுந்தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா? யாதொரு குற்றமும் செய்யாத நிரபராதியை இப்படிப்பட்ட கொடுமைக்கு உள்ளாக்குகிறார்களே! எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நீ கல் போலச் சும்மா உட்கார்ந்திருக்கிறாயே! ஐயோ! என் வயிறு பற்றி எரிகிறதே! என் உயிர் தள்ளாடுகிறதே! எங்களை இப்படிப்பட்ட மானக்கேட்டிற்கு ஆளாக்குவதைவிட, எங்களுடைய உயிர் போய்விடும்படிச் செய்து விடக்கூடாதா?