பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 செளந்தர கோகிலம் யம்மாள் தனது பெண்ணின் வாயை அடக்கி, 'அம்மா செளந் தரா என்ன உன்னுடைய புத்தி வர வர இப்படியாகிவிட்டது! நீ குழந்தை போல இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாம் தலையிட ஆரம்பித்துவிட்டாயே! இந்தச் சங்கதி வேறே யாரு டைய காதிலாவதுபட்டால், உனக்குத்தான் அவமான்ம் வந்து சேரும். ஆகையால், வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு; அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை ஜனங்கள் குற்றமாக மதிக்கமாட்டார்கள். அதைக்கண்டு அவளுடைய சொந்தத் தங்கையான நீ இப்படிப் பொறாமைப்பட்டு, அந்த ரகசியமான காரியத்தையெல்லாம் வெளியிடுகிறாயே என்று நினைத்து நீ மகா துர்க்குனி என்றும், நல்ல அறிவு இல்லாத டைத்தியக்காரி என்றும் சொல்லி உன்னைப் பற்றி ஏளனமாகப் பேசுவார்கள். ஆகையால், வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு; அவளுக்கு அந்தப் பையனை நாம் புருஷனாக ஏற்படுத்திவிட்டோம். ஆனாலும், அவர்கள் இருவரும் அவ்வளவு தூரம் பதற்றமாக எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவர்களல்ல. கோகிலாம்பா ளின் குணம் எனக்கு நன்றாகத் தெரியும்; அவள் மகா உறுதியான மனம் உடையவள். எப்படிப்பட்ட சந்தர்ப்பமாக இருந்தாலும் அவள் தவறான வழியில் இறங்கக்கூடியவளல்ல. அவள் வந்த வுடனே உண்மை என்ன என்பதை நான் கேட்டறிந்து உனக்குத் தக்க சமாதானம் சொல்லுகிறேன். நீ சொல்லுகிறபடியே ஏதாவது சம்சயமான காரியம் நடந்திருந்தால்கூட, அதைப்பற்றி நாம் கடுமை காட்டக்கூடாது. அந்தப் பையன் அவளுக்குப் புருஷ னாக வரிக்கப்பட்டுப் போயிருக்கிறான். அந்த ஏற்பாடு இனி மாறப்போகிறதில்லை. ஆகையால் யெளவனப் பருவத்தினரான - அவர்கள் ஆத்திரப்பட்டுத் தங்களை மீறி அப்படி ஏதாவது செய்திருந்தால்கூட அது குற்றமாகாது. உனக்கும் ஒரு புருஷன் நிச்சயப்பட்டுப் போனால் நீ கூட நாளைக்கு அப்படித்தான் செய்வாய், அதையெல்லாம் நாங்கள் கண்டித்தால், அது உன் மனசுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். இந்த விஷயத்தை வாயில் வைத்தே இனி நீ பேசாதே; அது நல்லதல்ல. கேட் பவர்கள் உன்னைத்தான் துஷிப்பார்கள் என்று அன்பாகவும் நயமாகவும் கூறி, அவளை அனுப்பிவிட்டாள். தனது தாய் சொன்ன வார்த்தைகள் அவளது மனதிற்குச் சமாதானம் உண்டாக்க