பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 163 தவைச் சாத்திக்கொண்டு உள்ளே இருந்து விட்டதுபோலத்தான் முடியும்” என்றார். காந்திமதியம்மாள், 'பெண்பிள்ளைகள் மாத்திரந்தானே அப்படிச் செய்யும்படி திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். தங்களைப் போன்ற ஆண்பாலர் எப்போதும் கடவுளைத் தொழவேண்டியது தானே. வேல்ஸ் இளவரசர் வந்த காலத்தில் உத்தியோகஸ்தர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் அவரை வரவேற்று அவரைக் கொண்டாடவில்லையா? அதைப் போல வெளியுலக நிர்வாகத்தை வகிக்கிறவர்களான ஆண்மக்கள் கடவுளினிடம் சத்தியாக்கிரகம் செய்ய முடியாதல்லவா? அந்த பக்த கோஷ்டியே கடவுளுக்கு ஏராளமாக இருக்குமே” என்றாள். திவான் முதலியார் வேடிக்கையாக நகைத்து, நாங்கள் மாத்திரம் கடவுளின் அருளை எதற்காக நாடுகிறது? இந்த விஷயத்தில் திருவள்ளுவர் சொன்னது குறைவாகச் சொன்ன தென்றே நான் நினைக்கிறேன். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை என்று அவர் சொன்னாரே. அதாவது, ஒரு பெண்பிள்ளை பதிவிரதா தருமத்தைக் கடைப்பிடித்து, புருஷனையே தெய்வமாக வணங்கினால், அதுவே அவளுக்குப் போதுமானது. அவள் வேறே எந்தக் கடவுளையும் தொழவேண்டிய அவசியமில்லை என்று அவர் சொல்லுகிறார். அப்படிப்பட்ட உத்தம ஸ்திரீகளுக் குத் தெய்வ கடாrமே தேவையில்லையென்று அவர் சொல்ல வில்லை. அவளுக்குத் தெய்வ கடாக்ஷம் தானாகவே உண்டாகும் என்று அதை நாம் அர்த்தம் செய்துகொள்ளவேண்டும். ஸ்திரீகளுக்கு எப்படிப் பதிவிரதா தருமம் சொல்லப்பட்டிருக் கிறதோ, அதுபோல புருஷருக்கும் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய தர்மங்கள் இருக்கின்றனவல்லவா. புருஷன் எப்போதும் தன் மனசையும், உடம்பையும் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும். அவன் எப்போதும் உண்மையையே பேசவேண்டும்; பிறருக்கு உதவி செய்ய வேண்டுமேயன்றி எவருக்கும் எவ்விதக் கெடுதலும் நினைக்கவும் கூடாது; செய்யவும் கூடாது. அவன் அன்னிய ஸ்திரீகளின்மேல் ஆசை கொள்ளாமல், ஒரே மனைவியோடு திருப்தியடைய வேண்டும்;