பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 167 கொஞ்சலாகவும் ஏக்கத்தோடும் கூறினாள். அந்தப் பெண்மணி யின் மனநிலைமையை அறிந்துகொண்ட திவான், 'நான் ஒருநாளைக்கு வேலை செய்யாதிருந்தால், மறுநாள் காகிதங்கள் மலைபோல் குவிந்து போகின்றன; அவைகளைப் பார்த்து முடிக்க நான் இரவு பகல் வேலை செய்ய நேருகிறது. ஆகையால், நான் ரஜா வாங்கிக்கொண்டு வருவதென்றால், நான்கு, அல்லது, ஐந்து நாள்களுக்கு மேல் நான் எங்கேயும் வந்து இருக்க முடியாது. நான் இப்போதே உங்களுடன் கூட வரும் பட்சத்தில் திருவிழாவின் நடுவில் நான் மாத்திரம் புறப்பட்டுத் திரும்பி வந்துவிடவேண்டும். நான் தேர் அன்றக்கு முதல் நாள் அங்கே வந்து சேருகிறேன்; அவ்விடத்தில் 2,3-தினங்கள் இருந்து, உங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்துவிடு கிறேன். அதுதான் நல்ல யோசனையாகப் படுகிறது. இப்போது உன்னோடு இரண்டு வேலைக்காரர்களை அனுப்புகிறேன். ஊரிலிருந்து வரப்போகும் தவசுப்பிள்ளையும்; இந்த வேலைக் காரர்களும் கூட இருந்தால், உங்களை ஜாக்கிரதையாக ஊரில் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்' என்றார்கள். பெண்மணி சிந்தித்தபடி சிறிது நேரம் மெளனமாக நின்று, 'தங்கள் சித்தம்' என்றாள். உடனே திவான் முதலியார், "சரி; அப்படியே செய்து விடுவோம். இவ்விதமாய் நாம் செய்யப்போவதாக நான் அப்பாவுக்கு இன்றைய தபாலில் ஒரு கடிதமும் எழுதி அனுப்பி விடுகிறேன். அதிருக்கட்டும். நான் நேற்று அழைத்துக்கொண்டு வந்த வீரம்மாளையும் அவளுடைய புருஷனையும் உள்ளே அனுப்பினேனே. அவர்கள் வந்தார்களா?' என்றார். மனையாள், "ஓ! வந்தார்கள் பெண் வந்து என் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆநந்தக் கண்ணிர் சொரிந்து, தாங்கள் செய்த தீர்மானத்தையும் தெரிவித்தாள். அவளுடைய புருஷரும் பின்னால் வந்து என்னுடைய காலில் விழுந்து கும்பிட எத்தனித்தார். அப்படிச் செய்ய வேண்டாமென்று நான் தடுத்து விட்டேன். அவர்கள் இருவரும் இருந்த நிலைமை நிரம்பவும் பரிதாபகரமான காட்சியாக இருந்தது. என்னையன்றி என் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது. மனம் பொங்கிப்