பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 செளந்தர கோகிலம் களும், அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், சமயா சமயங்களில் வைத்தியம் பார்ப்பதற்கு ஒர் ஆயுர்வேத நிபுணரும் செல்வார்கள். அவ்வாறு அவர்கள் முகாம் செய்யும் இடம் உயிர் பெற்று இயங்கும் ஒரு தர்பார் மண்டபம்போல விளங்கும். கூடாரத்தின் முக்கியமான பெரும் பாகம் திவானும் அவரது குடும்பத்தினரும் பிரத்தியேகமாகவும் செளக்கியமாகவும் இருப்பதற்கு உகந்ததாய் சயன மாளிகை, மடப்பள்ளி, ஸ்நான அறை, கூடம் முதலிய பற்பல பாகங்களைக்கொண்ட ஒரு பெரிய மாளிகை போல இருந்தது. காந்திமதியம்மாளும் புதல்வனும் புறப்பட்டுப்போன தினம் இரவிலேயே தாம் மறுநாட் காலையில் சனிதொடர் மங்கலம் என்ற ஊருக்குப் போய் அவ்விடத்தில் நாலைந்து தினங்கள் வரையில் முகாம் செய்யப் போவதாயும், அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தமது சிப்பந்திகளிடம் கூறி இருந்தார். ஆதலால் மறுநாள் விடியற்காலையில் அவர் படுக்கையை விட்டு எழுந்திருந்ததற்கு முன்பே இரண்டொருவர் தவிர மற்ற எல்லோரும் சகலமான சாமான்களுடன் புறப்பட்டு முன்னால் போய்விட்டனர். மிஞ்சியிருந்த சிலர் அவருக்குத் தேவையான வண்டியுடன் ஆயத்தமாக இருந்தனர். ஆதலால், அவர் எழுந்தவுடன் வீட்டிற்குள் வேறு எந்த இடத்திற்கும் போக மனமற்றவராய் நேராக வெளியிற் சென்று வாசற்கதவை மூடிப் பூட்டிக்கொண்டு வண்டியில் உட்கார்ந்து விரைவாக அந்த ஊரை விட்டுப் பிரயாணமாய் சில நாழிகை காலத்தில் சனி தொடர் மங்கலம் சென்று அவ்விடத்தில் தயாரிக்கப் பட்டிருந்த தமது கூடாரத்திற்குப் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தவர் வேலைக்காரரது வற்புறுத்தலைத் தடுக்கமாற்றாமல் தமது ஸ்நானம் போஜனம் முதலியவற்றையெல்லாம் ஒருவாறு முடித்துக்கொண்டார். ஆனாலும், அந்தக் காரியங்களை எல்லாம் அவரது தேகம் இயந்திரம் போலத் தானாகச் செய்தது என்றே நாம் கூறவேண்டும். அவரது மனம் திருவடமருதுாருக்குச் சென்று கொண்டிருந்த இன்ப உருவான தமது - நாயகியையும் புதல்வனையும் தொடர்ந்து சென்று, அதே நினைவில் லயித்துப் போயிருந்தது. அவர்கள் தம்மை விட்டுப் பிரிந்து போனதால் ஏற்பட்ட ஏக்கமும் மனவேதனையும் ஒரே மும்முரமாகக்