பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செளந்தர கோகிலம் விஷயத்தில் அவளது மனத்தில் கட்டிலடங்கா மையலும், மோக விடாயும் ஏற்பட்டுவிட்டன. கண்ணபிரானும் கோகிலாம் பாளும் பூங்காவில் சரஸ் ஸல்லாபம் செய்துகொண்டிருந்தது சரியான காரியம் என்றும் அதைத் தாங்கள் கவனிக்கக் கூடாது என்றும் தனது தாய் சொன்னதும் அவளுக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் நினைவிற்கு வந்தது. தனக்கும் சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் ஒரு மாத காலம் கழித்துக் கலியாணம் நடக்கும் வரையில் தனது மோக வேட்கையை அடக்கி வைப்பது சாத்தியமில்லாத காரிய மாகத் தோன்றியது. ஆகவே தனது அக்காள் செய்ததுபோல, தானும் சுந்தரமூர்த்தி முதலியாரை எப்படியாவது தனிமையான ஒர் இடத்திற்கு வரவழைத்து அவரோடு பேசிக் கொஞ்சி குலாவி சரஸ் ஸல்லாபம் புரியவேண்டுமென்ற ஆசையும் ஆவலும் எழுந்து அவளது மனத்தை வதைத்துப் பெருகிக் கொண்டி ருந்தன. தான் தனது கருத்தை சுந்தரமூர்த்தி முதலியாருக்கு எப்படித் தெரிவிப்பது என்று தத்தளித்திருந்த சமயத்தில் புஷ்பாவதியம்மாள் அவளைப் பார்ப்பதற்காக அன்றைய தினம் பகலில் அங்கே வந்தாள். புஷ்பாவதியம்மாள் தனது புருஷனது தங்கை என்பதை அறிவாள் ஆதலாலும், அவள் தன்னிடத்தில் குது.ாகலமாகவும், பிரியமாகவும் பேசினாள் ஆதலாலும், சுந்தர மூர்த்தி முதலியார் அவளிடத்தில் தனியாகப் பேசவேண்டு மென்று ஆசைப்படுவதாகச் சொன்னாள் ஆதலாலும், செளந்தர வல்லியம்மாள் தனது மனத்திலிருந்த ரகசியங்களை எல்லாம் கபடமில்லாக் குழந்தைபோல அப்படியே அவளிடத்தில் வெளி யிட்டுவிட்டாள் பூங்காவில் தனது அக்காளும் கண்ணபிரானும் செய்த காரியங்களையும், தான் கண்டபடியே வெளியிட்டு விட்டாள். . - அதைக்கேட்ட புஷ்பாவதியம்மாள் அவளும் தனது அண்ணனும் தனியான இடத்தில் சந்தித்து சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான உதவியைத் தான் செய்து வைப்பதாகவும், தனது அண்ணனிடத்தில் கலந்து யோசித்து எவ்விடத்தில் எப்போது அவர்கள் சந்திப்பது என்பதை அறிந்து வந்து சொல்வதாக வாக்குறுதி செய்துவிட்டுப் போயிருந்தாள். அதன்பிறகு செளந்தரவல்லியம்மாள் புஷ்பாவதியின் வருகையை மிகுந்த ஆவலோடும் மனோசஞ்சலத்தோடும் எதிர் பார்த்தி