பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி - 17 ருந்தாள். அந்தச் சந்தர்ப்பத்தில் பாச்சாமியான் முதலியோர் வந்து ஆரவாரம் செய்ததையும் செளந்தர வல்லியம்மாள் தான் இருந்த அறையின் ஜன்னலண்டை நின்று கேட்டுக்கொண்டிருந் தாள். கண்ணபிரானுக்கும், அவனது தாய்க்கும், கோகிலாம் பாளுக்கும் மேன்மேலும் ஏற்பட்ட அவமானத்தையும் இழிவை யும் காணக்கான செளந்தரவல்லியின் மகிழ்ச்சியும் குதுரகலமும் ஆநந்தமும் ஒன்றுக்கு நூறு மடங்காகப் பெருகின. தான் எப்படியாகிலும் பிரயாசைப்பட்டு அன்றைய தினம் இரவிலேயே சுந்தரமூர்த்தி முதலியாரைச் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்ற தீர்மானம் பலப்பட்டு அவளை ஓயாமல் தூண்டிக் கொண்டே இருந்தது. ஆகையால், அவள் புஷ்பாவதிக்கு அன் றைய பகல் முழுதும் ஆள் அனுப்பி, தான் உடனே அவளைப் பார்க்க ஆவல்கொண்டிருப்பதாகவும், தான் கேட்டுக்கொண்ட காரியத்தை அன்றைய இரவிற்குள் புஷ்பாவதி முடித்து வைக்க வேண்டுமென்றும் பல தடவைகளில் செய்தி சொல்லியனுப் பினாள். ஆனால் புஷ்பாவதி, பூஞ்சோலையம்மாள் முதலியா ரோடு கூட இருந்து, கோகிலாம்பாள், கற்பகவல்லியம்மாள் ஆகிய இருவருக்கும் மூர்ச்சை தெளிவிப்பதற்கு உதவியாக இருந்தாளாதலால், மற்றவரிருவரும் படுத்த பிறகு எவருக்கும் தெரியாதபடி புஷ்பாவதி எழுந்து செளந்தரவல்லியின் விடுதிக்கு வந்து சேர்ந்தாள். சுந்தரமூர்த்தி முதலியார் பங்களாவிலேயே இருக்கிறாரென்றும், புஷ்பாவதியின் மூலமாக அன்றைய இரவிலேயே அவரைத் தனது விடுதிக்கு வருவித்து அவரோடு சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றும் செளந்தரவல்லியம்மாள் நினைத்து அவளது வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தாளாகையால், அவள் வந்து கதவைத் தட்டிய உடனே மிகந்த குதூகலமும், அடக்க முடியாத மனவெழுச்சியும் கொண்டவளாய்ப் புன்னகையால் மலர்ந்த இனிய முகத்தோடு வந்து கதவைத் திறந்து, அவளை அன்பாக உபசரித்து உள்ளே அழைத்துக்கொண்டுபோய் உட்கார வைத்தாள். ஆனால் புஷ்பாவதியின் முகம் எப்போதும்போல இனிமையாகவும் சந்தோஷமாகவும் இல்லாமல் வாட்டமடைந்து மாறிப்போயிருந்தது. அதைக்கண்ட செளந்தரவல்லி, 'அம்மா! உன்னுடைய முகம் ஒரு மாதிரி இருக்கிறது? எனக்கு நீ சந்தோஷ செ.கோ.!!-2