பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 செளந்தர கோகிலம் தனத்தாரிடத்திலிருந்து ஒரு புதிய உத்தரவு வந்திருந்தது. அதுவரையில் சப் மாஜிஸ்டிரேட்டு உத்தியோகங்களுக்கு நியமிக்கப்படுபவர்கள் அதற்கு முன் கீழ் உத்தியோகங்களில் பல வருஷகாலம் வேலைபார்த்து, ரெவினியூ கிரிமினல் முதலிய பரீட்சைகளில் தேறியவர்களாகவே இருக்க வேண்டுமென்ற உத்தரவு இருந்து வந்தது. அப்போது வந்த புதிய உத்தரவில், நல்ல படிப்பாளியாகவும், மகா புத்திமானாகவும், திறமைசாலி யாகவும், பெரிய இடத்துப் பிள்ளையாகவும், இருக்கும் யெளவனப் புருஷர்களில் இரண்டொருவரை ஒவ்வொரு வருஷத்திலும் பொறுக்கி எடுத்து அவருக்கு நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து நேராக சப் மாஜிஸ்டிரேட் உத்தியோகத் திற்கும், மேல் உத்தியோகங்களுக்குப் பழக்க வேண்டுமென்று கவர்னர் எழுதி இருந்தமையால், நமது அண்ணாசாமிக்கு நேராக ஒரு சப் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் கொடுக்கலாம் என்ற எண்ணம் அந்தக் கலெக்டருக்கு உண்டாயிற்று. ஆயினும், அவ்வாறு அவருக்குத் தாம் உத்தியோகம் செய்து வைக்குமுன் தமது கருத்தை திருவனந்தபுரத்திலிருந்த திவான் முதலியாருக்கு எழுதி அவரது மறுமொழியைப் பெற்று அதற்குமேல் அதை நிறைவேற்ற வேண்டுமென்று தீர்மானித்து அந்த நற்சாகசிப் பத்திரத்தையும் தமது கடிதத்தோடு கூட வைத்து நமது திவான் முதலியாருக்கு அனுப்பிவிட்டார். அந்தக் கடிதம் நமது திவான் முதலியார் காந்திமதியம்மாளையும், தமது புதல்வனையும் விட்டுப் பிரிந்து ஏக்கமுற்று சனிதொடர் மங்கலத்தில் முகாம் செய்திருந்த காலத்தில் அவரிடம் வந்துசேரவே, அவர் அதைப் படித்துவிட்டு முன் குறிக்கப்பட்டபடி மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்தார். தாம் படித்து உத்தியோகம் பார்க்க ஆரம்பித்தது முதல் அதுவரையில் எவருக்கும் தாம் அவ்விதமான நற்சாகரிப்பத்திரம் கொடுத்ததே இல்லை என்பது அவருக்குத் தெளிவாகவும் நிச்சயமாகவும் நினைவிருந்தது. ஆனால், அதில் செய்யப்பட்டிருந்த கையெழுத்து தத்ரூபம் தம்முடைய கையெழுத்தைப் போலவே இருந்தது. அந்த மனுதாரன் திருவடமருதூரிலுள்ளவன் என்பதை அவர் உணரவே, அவருக்கு உண்மை ஒருவாறு விளங்கிவிட்டது. தாம் தந்தைக்கு எழுதிய ஏதேனும் ஒரு கடிதத்திலிருந்து தமது கையெழுத்தைப் பார்த்து