பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காங்கிமகி யம்மாள். ராமா பககார் என்றும் அவன் என்னிடம் தெரிவித்தான். நீ வந்த பிறகு நான் அதை உன்னிடம் சொல்வதாகச் சொன்னேன். அந்தப் பொட்டலத்திலிருந்த வடைகளை அவன் உடனே கொண்டு போய்விட்டான். ஒருவேளை அவன் அந்த வடைகளையும் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம். அதனால்தான் பாத்திரத்தில் வடைகள் குறையாமல் முன்போலவே இருக்கலாம். நீ வடைகளை ஏன் மறைத்து வைக்கிறாய்? உனக்கு இஷ்டமானவர்களுக்கு நீ தாராளமாகக் கொடுக்கலாம். இதனால் எனக்குப் பிரமாதமான நஷ்டம் வந்துவிடாது. இப்போது நீ மறைத்து வைத்ததால், இந்த அற்ப விஷயத்தில் நான் உனக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கவும், நான் எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான கடிதம் தடைப்படவும் நேர்ந்ததை நீயே பார்க்கிறாயல்லவா’ என்றார். அதைக் கேட்ட முத்துசாமிக்கு இடி விழுந்ததுபோலாய் விட்டது. தபாலாபிசிலிருந்து வந்தவுடன் வடைகளைத் தின்றது அவனது உடம்பில் பெருத்த சங்கடம் உண்டாகி அவனை வதைத்துக்கொண்டிருந்ததென்று முன்னரே கூறினோம் அல்லவா. அந்த உபத்திரவம் படிப்படியாய் அதிகரித்து அவன் நிலை கொள்ளாமல் தத்தளித்துத் துவளும்படி செய்து கொண்டிருந்த சமயத்தில், திவான் கூறிய வரலாற்றை அவன் கேட்கவே, அவனது முகத்தில் பிரேதக்களை உண்டாகிவிட்டது. அவன் பிரமித்து ஸ்தம்பித்து இரண்டொரு விநாடி நேரம் நின்றபின் வேரற்ற மரம்போல திவானினது பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து கைகளிரண்டையும் முன்னால் நீட்டிக் குவித்து மனநைந்து உருகி அழுதவண்ணம், “எஜமானே! நான் மகா சண்டாளன்! பரம துரோகி படுபாவி! நெஞ்சில் கொஞ்சமும் விசுவாசமற்ற கொலை பாதகன்! உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் நன்றிகெட்ட நாயினும் கடையவன்! மகா புண்ணியாத்துமாவாகிய தங்களுக்கு நான் செய்ய நினைத்த கேடு எனக்கே வந்து வாய்த்தது. சுவாமீ மகா பாவியாகிய என் முகத்தில் தாங்கள் விழிப்பதும், என்னோடு பேசுவதும் தகாத காரியமானாலும், தாங்களே இந்த சமஸ்தானத்திற்கு முக்கிய நியாயாதிபதியாகையால், தாங்கள் என் விஷயத்தில் ஒரே ஒரு காரியம் மாத்திரம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செ.கோ..!!-13