பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 2O3 பெண்மணி மரியாதையாகவும் தனது கண்ணியத்திற்குக் குறைவில்லாமலும் மிருதுவாகப் பேசத் தொடங்கி, "ஐயா! ஏதோ ஒரு பெருத்த தவறு நடந்துவிட்டது போலத் தோன்று கிறது. எங்களுடைய நெருங்கிய பந்து ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் அக்கிரமமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தம்மைப் பார்க்க வரும்படி எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை எடுத்துவந்த மனிதர் என்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்து, இதுதான் போலீஸ் ஸ்டேஷன் என்றும், இந்த அறைக்குள் அந்த உறவினர் இருக்கிறார் என்றும் சொல்லி என்னை உள்ளே அனுப்பினார். அவர் சொன்னதை நிஜமென்று நம்பி நான் இங்கே வந்து விட்டேன். இந்த இடத்தைப் பார்த்தால், இது படுக்கையறை போலத் தோன்றுகிறது. தாங்கள் இன்னார் என்பதும் எனக்குத் தெரியவில்லை. தாங்கள் வேறே யாரோ ஒருவருடைய வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிகிறது. என்னை இதற்குள் அனுப்பிய மனிதர் இந்த அறையின் வெளிக்கதவை மூடித் தாளிட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. தாங்கள் தயைசெய்து அந்த மனிதரைக் கூப்பிட்டுக் கதவைத் திறக்கச் செய்யுங்கள். நான் வெளியில் போகவேண்டும்” என்று நயமாகக் கூறினாள். அவளது சொற்களைக் கேட்ட இன்ஸ்பெக்டர் முற்றிலும் கபடமாகவும் குறும்பாகவும் மறுமொழி கூறத்தொடங்கி, 'ஒகோ! அப்படியா சங்க்தி உன்னை இதற்குள் அனுப்பிய மனிதன் கதவை மூடி வெளியில் தாளிட்டுக் கொண்டானா! பேஷ்! அவன் செய்தது நமக்கு அநுகூலமான காரியந்தானே. அதைப்பற்றி சந்தோஷப்படுவதை விட்டு நீ ஏன் விசனப் படுகிறாய்? புதிதாக சோபன அறைக்குள் நுழைகிற யெளவன ஸ்திரீகள் நிரம்பவும் லஜ்ஜைப்படுவார்களென்று நினைத்து வெளியிலுள்ள பந்து ஜனங்கள் இப்படித்தான் கதவை மூடி வைப்பார்கள். அதுவுமன்றி, பெண் நிரம்பவும் பிடிவாத குணமுடையதாய் இருந்தால், அது கதவைத் திறந்துகொண்டு வெளியில் ஓடாமல் உள்ளேயே இருந்து புருஷருக்கு வசப்படவேண்டுமென்ற எண்ணத்தோடு வெளியில் ஜனங்கள் தாளிடுவதும் உண்டு. நீ எல்லா விஷயங்களையும் அறிந்த