பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 செளந்தர கோகிலம் அவர்கள் இங்கே வந்து இந்நேரம் காத்திருந்தார்கள். நீ வர வில்லை. பக்கத்திலுள்ள கோட்டைக்கு ஒர் அசவர காரியமாப் அவர்கள் போயிருக்கிறார்கள். அதுவுமில்லாமல், நீங்கள் வரும் போது அவர்கள் இங்கே இருந்தால் அது சந்தேகத்துக்கு இடங் கொடுக்குமாம். உன் வண்டி இங்கே வந்து நிற்கையில், அவர்கள் தற்செயலாக வருகிறவர் போல வந்து வண்டி நிற்பதைக் கண்டு அம்மாளோடு பேச்சுக்கொடுக்க வேண்டுமாம். அவர்கள் கோட்டைக்குள் போய்த் தங்களுடைய அலுவலைச் சீச்கிரத்தில் முடித்துக்கொண்டு வெளியில் வந்து கோட்டையின் கிழக்குப் பக்கத்தில் மறைவாக இருப்பதாகச் சொன்னார்கள். நீ வந்தவுடன், உன்னோடு நான் பேசி, பெண் வண்டியில் வந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு சீக்கிரமாக ஓடிவந்து தம்மிடம் சொல்லும்படி திட்டம்செய்து, என்னை இங்கே நிறுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள், நான் போய் அவர்களை உடனே அழைத்துக்கொண்டு வருகிறேன். நீ இவ்விடத்திலேயே இரு வண்டியண்டை நீ வரவேண்டாம். நான் போய் அவர்களை இங்கே அழைத்துவர ஐந்து நிமிஷநேரம் பிடிக்கும். அவர்கள் அம்மாளிடம் கால்மணி நேரமாவது பேசிவிட்டு, நீ இங்கே வந்திருக்கிறாயென்பதை அம்மாள் வாயின் மூலமாகவே தெரிந்து கொள்ளுகிறவர் போலக் காட்டிக் கொண்டு உடனே உன்னைக் கூப்பிடுவார்கள். அநேகமாய் நானே உன்னைக் கூப்பிட இங்கே வருவேன். அதுவரையில் நீ இவ்விடத்திலேயே இரு. மேலே தலையைக்கூடக் காட்ட வேண்டாம்” என்றான். அந்த வரலாற்றை உண்மையென்று நம்பிய மினியன் சிறிதுநேரம் யோசனை செய்தபின், 'சரி நீ ஓடி ஐயாவைக் கடிய இட்டா. இல்லாமெப்போனா, அம்மா இந்த எடம் இன்னதுங்கறத்தெக் கண்டுக்கினு கீயே எறங்கி வந்து என்னெக் கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க" என்று ஆத்திரத்தைக் காட்டி மொழிந்தான். உடனே அந்த மனிதன், "நீ வண்டியை விட்டு இறங்கி இங்கே வந்தபோது அம்மாளிடம் என்ன சொல்லிவிட்டு வந்தாய்?" என்றான். மினியன், "அடிவவுத்தெ நோவுதுன்னு சொல்லிப்புட்டு வந்தேன்” என்றான். அந்த மனிதன், "அப்படியானால், அம்மாள் இந்தப் பக்கம் வரவும் மாட்டார்கள். உன்னைப் பார்க்கவும் மாட்டார்கள். நீ