பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 செளந்தர கோகிலம் தனக்கும் அவருக்கும் அதற்குமுன் அதிகமான பழக்கம் இல்லை என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டு மெதுவாக வெளியில் வந்து சரிவின் வழியாய் மேலே ஏறி இளைய ஜெமீந்தாரை நோக்கி, "என்ன சாமி! நீங்க எங்கே வந்தீங்க! நான் வண்டியை ஒட்டிக்கினெ வந்தேன். ஒரே மயக்கமாப் போச்சு குதிரெ இன்ன எடத்துக்குப் போவுதுன்னு எனக்குத் தெரியாமெப் பூட்டுது. ஒடனே வவுத்தெக் கலக்கிப்புட்டுது. வண்டியெ உட்டு எறங்கி மணலுக்குப் போயிப் படுத்தேனுங்க, அதுதான் தெரிஞ்சது; திரியும் இப்ப நீங்க கூப்பிட்டீங்க. இதுதான் தெரிஞ்சுது” என்று மிகுந்த வியப்பும் துன்பமும் தோற்றுவித்தவனாய்ப் பேசினான். ரஸ்தாவில் வண்டிக்குள் இருந்த கோகிலாம்பாளுக்குக் கேட்கவேண்டுமென்று அவ்வாறு பேசினான். ஆதலால், அவன் செவிடனிடம் பேசுவதுபோல பலமாக ஓங்கிப் பேசினான். அவன் கூறிய சொற்களைக் கேட்டும் கேளாதவர் போலத் தோன்றிய இளைய ஜெமீந்தார், "அடே மினியா வண்டியைக் காணோமேடா! நீ வண்டியை ரஸ்தாவில் நிறுத்திவிட்டுப் பாலத்தின் கீழே வந்ததாக என்னுடைய ஆள் வந்து என்னிடம் சொன்னான். நானும் அவனும் உடனே புறப்பட்டு இப்போதுதான் வருகிறோம். ரஸ்தாவில் இருந்த வண்டியைக் காணோமே! அது இதற்குள் எங்கே போயிருக்கும்?' என்று பதை பதைப்பும், வியப்பும், ஆவேசமும் தோன்றக் கூறினார். அந்தச் செய்தி மினியனுக்குப் பெருத்த இடி வீழ்ந்தது போலாய்விட்டது. அவன் திடுக்கிட்டு, சகிக்கவொண்ணாத அபாரமான திகிலும் குலை நடுக்கமும் அடைந்து, 'ஆ' என்ன! என்ன ரஸ்தாவுலே வண்டி இல்லையா இந்த எடத்துலே தானே நானு வண்டியை நிறுத்தினேன். இதுக்குள்ளற அது எப்பிடி மாயமா மறைஞ்சு பூட்டுதுங்க” என்று கூறிய வண்ணம் ரஸ்தாவிற்கு ஒடி வந்து, அதன் இரண்டு திக்கிலும் திரும்பிப் பார்த்தான். கண்கண்ட தூரம் வரையில் இரண்டு திக்குகளிலும் வண்டியே காணப்படவில்லை. சுந்தரமூர்த்தி முதலியார் கொணர்ந்திருந்த அவரது பீட்டன் வண்டிமாத்திரம் ரஸ்தாவில் காணப்பட்டது. மினியன் முற்றிலும் பிரமித்து ஸ்தம்பித்து இளைய ஜெமீந்தாரின் முகத்தைப் பார்க்க, அவரும் அது