பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 233 போலவே பெருத்த கலக்கமும் குழப்பமும் மனப்பிராந்தியும் அடைந்தவராய் அவனை நோக்கி, "என்னடா இதுபெருத்த மாயமாக அல்லவா இருக்கிறது! நீ வரவில்லையென்று நினைத்து அந்தப்பெண்ணே ஒருவேளை வண்டியை ஒட்டிக்கொண்டு போயிருக்குமோ? சே! அப்படி ஒரு நாளும் நடந்திராது. வேறே யாராவது வந்து தனிமையில் நிற்பதைக் கண்டு குறும்புக்காக ஒட்டிக்கொண்டு போயிருப்பார்களா? அல்லது, குதிரை மோட்டார் வண்டி முதலிய எதையாவது கண்டு மருண்டு வண்டியை இழுத்துக்கொண்டு ரஸ்தாவோடு போயிருக்குமோ? இது எப்படித்தான் நடந்திருக்குமென்பது விளங்கவில்லையே!” என்று வியப்பே வடிவாகக் கூறினார். மினியன் முற்றிலும் சித்தப்பிரமை கொண்டவன்போல மாறித் தத்தளித்துத் தனது கைகளைப் பிசைந்துகொண்டு, 'ஐயா! சாமீ. எஜமானர் ஊட்டுக் கொயந்தெக்கி என்ன கதி வந்திச்சோ தெரியலியே!” என்று நிரம்பவும் தாபந்திரியமாகக் கூறிப் பரிதவித்தான். அது போலவே சுந்தரமூர்த்தி முதலியாரும் மிகுந்த கலக்கமும் விசனமும் தோற்றுவித்து, 'இதுபெரிய கண்கட்டு வித்தை போலல்லவா இருக்கிறது! இதே இடத்தில் கோகிலாம்பாள் வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்ததை என் வேலைக்காரன் பார்த்து பத்து நிமிஷ நேரம் கூட ஆகவில்லை. இதற்குள் அவள் எப்படி மாயமாய்ப் போயிருப்பாள் என்பது தெரியவில்லையே. அவள் மாத்திரம் மறைந்து போயிருந்தால் ஒரு வேளை அவள் கீழே இறங்கிப் போயிருப்பாளோ, அல்லது வேறே யாராவது அவளை அழைத்துக்கொண்டோ, பலவந்தமாய் அபகரித்துக் கொண்டோ போயிருப்பார்களோ வென்று எண்ண வகையுண்டு. இவ்வளவு பெரிய வண்டி போன இடம் தெரியவில்லையே. நாங்கள். வடக்குத் திக்கிலிருந்து வருகிறோம். ஆகையால், அந்தப் பக்கமாய் வண்டி போகவில்லை என்பது நிச்சயம். தெற்குப் பக்கமாகத் தான் அது போயிருக்கவேண்டும். இந்த ரஸ்தாவோ தாரினால் மெழுகப்பட்டிருப்பதால், வண்டிச் சுவடுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் இப்போது தெற்குத் திக்கில் விசையாகப் போய்ப் பார்ப்பதைத் தவிர வேறே எதையும் செய்வதற்கில்லை. மினியா! நீயும் எங்களோடு வண்டியில் உட்கார்ந்துகொள். போய்ப் பார்ப்போம்” என்று அவசரமாகவும் ஆத்திரமாகவும்