பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 செளந்தர கோகிலம் பற்றி அக்கறை இல்லை' என்று நிரம்பவும் பணிவாகக் கூறினான். அதைக் கேட்ட திவான், "இல்லையப்பா எனக்குத் துரக்கம் பிடிக்க இன்னம் வெகுநேரம் ஆகும். அதைப்பற்றி நீ கிலேசப்பட வேண்டாம். நீ போய் உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அவசியம் வந்துவிட்டுப் போ” என்றார். கந்தன் அதற்கு மேலும் அவரை மறுத்துப் பேச மாட்டாதவ னாய் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு அவ்விடத்தை விட்டு, சமையலறைக்குப் போய்க் கால்நாழிகை காலத்தில் தனது போஜனத்தை முடித்துக்கொண்டு மறுபடி மெதுவாகவும் சந்தடி செய்யாமலும் தயங்கித் தயங்கி நடந்து திவானுக்கெதிரில் வந்து நின்றான். அவனைக் கண்ட முதலியார், 'கந்தசாமீ! அதோ மேஜையின்மேல் ஒரு காகிதப் பொட்டலம் இருக்கிறதே. அதை எடுத்துக்கொள். உனக்குச் சேரவேண்டிய பணம் அதில் இருக்கிறது” என்றார். உடனே கந்தன் அவர் காட்டிய பொட்டலத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அவரைநோக்கிக் கீழே குனிந்து நிரம்பவும் பணிவாகவும் உருக்கமாகவும் நமஸ்காரம் செய்து, "எஜமானே உத்தரவு வாங்கிக்கொள்கிறேன். எஜமானியம்மாளும் இங்கே இல்லை. தாங்கள் தங்கள் உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளவேண்டும். நான் ஊருக்குப் போய் என் காரியங்கள் முடிந்தபிறகு கடிதம் எழுதுகிறேன். எஜமானருடைய ஆசீர்வாதமும் அன்பும் எப்போதும் இந்த ஏழையின்மேல் இருக்க வேண்டும். நான் இந்த இரண்டு வருஷகாலம் இங்கே இருந்ததில் தெரிந்தோ தெரியாமலோ நான் எத்தனையோ தவறுகள் செய்திருக்கலாம். எதையும் எஜமானர் மனசில் வைக்கக்கூடாது. இந்த ஏழை தங்களுக்கு ஒரு காலத்தில் அடிமையாய் இருந்தவன் என்ற ஞாபகம் ஒரு மூலையில் இருக்கவேண்டும். எஜமானே! நான் போய் வருகிறேன். தாங்கள் தூங்குங்கள். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அடிக்கடி குமாஸ்தாவுக்குக் கடிதம் எழுதி எஜமானருடைய rேமத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டேதான்