பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுக்கெனை 251 இருப்பேன். நான் ஊருக்குப் போனவுடன் திருவிடமருதூருக்குப் போய் எஜமானியம்மாளுக்குக் கால்கும்பிட்டு குழந்தையையும் பார்த்துவிட்டுத்தான் வரப்போகிறேன். எஜமானே உத்தரவு கொடுங்கள்' என்று நிரம்பவும் உருக்கமாகவும் பணிவாகவும் தழுதழுத்த குரலிலும் கூறி அவரை மறுபடியும் வணங்கி நமஸ்கரித்தான். அதைக் காண திவானினது மனம் இளங்கியது. அவரது கண்களில் ஆநந்தக் கண்ணிர்துளிர்த்தது; அவர் "அப்பா கந்தசாமி, நீ போய்க் கலியாணம் செய்துகொண்டு rேமமாயிரு. உன்னுடைய நல்ல குணத்துக்கும் நல்ல நடத்தைக்கும் தக்கபடி கடவுளின் அதுக்கிரகம் உனக்குப் பூர்த்தியாக ஏற்படும். போய் உன் rேம லாபத்தைப்பற்றி எனக்கே நீ அடிக்கடி கடிதம் எழுது” என்றார். அதைக்கேட்ட கந்தன் மறுபடி பன்முறை குனிந்து குனிந்து கும்பிட்டு அவரை விட்டுப் பிரியச் சிறிதும் மனமற்றவனாய் அவ்விடத்தை விட்டு வெளியில் போனான். போனவனுக்கு அவனது ஆவேசம் அடங்க கால்நாழிகை நேரம் பிடித்தது. அதன்மேல் தனது கையிலிருந்த காகிதப் பொட்டலத்தின் நினைவு உண்டானது. ஆகையால், அதைப் பிரித்து அதற்குள்ளிருந்த பணத்தை, அதற்குமுன் தான் தனது துணிமுட்டையில் முடிந்து வைத்திருந்த பணத்தோடு சேர்த்து முடியவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. ஆகையால், அவன் உடனே அந்தக் காகிதப்பொட்டலத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். பார்க்கவே, அவனுக்குக் குலைநடுக்கம் எடுத்துக் கொண்டது. அவசனது தேகம் கிடுகிடென்று ஆடத் தொடங்கியது. அபாரமான திகிலும் வியப்பும் அவனது மனத்தில் எழுந்தன. அந்தப் பொட்டலத்தில் திவான் இரண்டு அல்லது மூன்று ஐந்து ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கலாமென்று அவன் நினைத்ததற்கு மாறாக, அதற்குள் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நான்கும், நூறு ரூபாய் நோட்டுகள் நான்கும் இருந்தன. அவை களைக் காண, அவனுக்குச் சித்தப்பிரமை உண்டாகிவிட்டது. அவனது அறிவு மயங்கியது. கண்கள் பூத்துப்போக, எதிரில் இருப்பது இன்னதென்பதே தெரியாமல் போயிற்று. திவான் தூக்கக் கலக்கத்தில் நோட்டுகளைத் தவறுதலாக எடுத்து வைத்திருப்பாரோ, அல்லது தனது நாணயத்தைப் பரீட்சிப்பதற்