பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 செளந்தர கோகிலம் திவான் தமது சயனத்தையடைந்து படுத்துக் கொண்டார். ஆனாலும், இரவு முழுதும் அவருக்கு நித்திரையென்பதே உண்டாகவில்லை. ஆதலால் அவர் பெருத்த வியாகூவத்தில் ஆழ்ந்தபடி இருந்து அந்த இரவைக் கடத்தினார். அந்த ஒர் இரவு பல இரவுகள்போலப் பெருகி நீண்டு அவரை நரக வேதனையில் ஆழ்த்தியது. ஆயினும், அவர் தமது மன வேதனைகளைப் பொறுத்திருந்து பொழுது விடியும் தருணத்தில் மற்றவர் எழுந்திருப்பதற்குமுன் எழுந்து, தமது மேட்டார் வண்டியில் உட்கார்ந்து அதை விடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து மேற்குத் திக்கில் சென்ற ரஸ்தாவோடு விரைவாகச் செல்லலானார். அந்த ரஸ்தா மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்தில் மலை நாடுகளுக்குள் ஏறிச்சென்ற ரஸ்தாவாதலால், எங்கும் ஒரே மலையும் காடுமாக இருந்தன. இடையில் வெகு தூரத்திற்கு ஒரிடத்தில் சிறிய சிறிய ஊர்கள் ஆங்காங்கு காணப்பட்டன. சநிதொடர் மங்கலத்திலிருந்து சுமார் முப்பது மைல் தூரம் வரையில் அவ்வாறு அப்பால் காணப்பட்ட பயங்கரமான ஒரு காட்டிற்குள் தமது மோட்டார் வண்டியைக் கொண்டுபோய், அதிலிருந்து கீழே இறங்கித் தமது மூட்டையைக் கையிலெடுத்துக் கொண்டார். எடுத்துக் கொண்ட பிறகு அவ்விடத்தில் ஒரு பனை ஆழத்தில் காணப்பட்ட ஒரு பள்ளத்தைப் பார்த்துத் தமது மோட்டார் வண்டியின் விசையைத் திருப்பிவிட்டார். விடவே, மோட்டார் வண்டி தடதடவென்று பள்ளத்தில் ஒடிக் கரணம் போட்டுக் கொண்டு தலை குப்புற விழுந்து உருண்டு புரண்டு பள்ளத்தின் அடியில் போய்ச் சாய்ந்துவிட்டது. உடனே திவான் தமது மூட்டையை எடுத்துக்கொண்டு சிறிது தூரத்திற்கு அப்பாலிருந்த தண்ணிர் சுனையண்டை போய் உட்கார்ந்து கொண்டு தமது மூட்டையை அவிழ்த்து அதற்குள்ளிருந்த அம்பட்டன் கத்தியை எடுத்துத் தமது தலைமயிர் மீசை முதலியவைகளையெல்லாம் அடியோடு கூடிவரம் செய்து மழுங்க மொட்டையடித்துக்கொண்டு மூட்டையிலிருந்த காசிச் சொம்பினால் சுனைத் தண்ணிரை எடுத்து ஸ்நானம் செய்து உடம்பைத் துடைத்துக்கொண்டு, நோட்டுகளடங்கிய வண்டிக் காரன் பையை அரைஞாணாகக் கட்டி காஷாயம் நனைத்த கோவணத்தை எடுத்து அணிந்து கொண்டார்; கழுத்து முதல்