பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 263 கணைக்கால் வரையில் மூடிக்கொள்ளும் அங்கியொன்றை எடுத்து மாட்டிக்கொண்டார்; முகம் தலை முதலிய இடம் முழுதிலும் விபூதியைப் பட்டை பட்டையாக அணிந்து கொண்டார்; கழுத்து காதுகள் தலை முதலியவைகளில் ஏராளமான ருத்திராக மாலைகளைத் தரித்துக் கொண்டார். மிகுதியிருந்த துணிகள் முதலிய சாமான்களைச் சிறிய மூட்டையாக இடுப்பைச் சுற்றி அங்கியின்மேல் கட்டிக் கொண்டு, இடது கையில் காசிச்சொம்பைத் தொங்கவிட்டுக் கொண்டார்; வலது கையில் ஒரு தண்டத்தைப் பிடித்துக் கொண்டு அந்தத் தண்ணிர்ச் சுனையை விட்டுப் புறப்பட்டு விரைவாக நடந்து பக்கத்திலிருந்த ஊரையடைந்தார். அது வரையில் சாதாரணமாக வந்தவர் ஊருக்குள் நுழைந்தபோது மிகுந்த பதைபதைப்பும் விசனமும் அவசரமும் காட்டிய வண்ணம் ஒடி, தமக்கெதிரில் காணப்பட்ட மனிதர்களை நோக்கி, "ஐயா! இந்த ஊரின் கிராம முனிசீப்பு எங்கே இருக்கிறார்?' என்று வினவினார். அதைக் கேட்ட அந்த ஊர்வாசிகள், "என்ன விசேஷம்? எதற்காக கிராம முனுசீப்பைத் தேடுகிறீர்கள்?’ என்றனர். நமது திவான் நிரம்பவும் வேகமாக ஓடிவந்தவர்போல இரைக்க இரைக்கப் பேசத் தொடங்கி, "இதோ! பக்கத்தில் ஒரு கொடிய அபாயம் நேர்ந்துவிட்டது! ஒரு பெரிய மனிதர் அநியாயமாய் இறந்து போய்விட்டார் கிராம முனுசீப்பை நான் உடனே அழைத்துக்கொண்டு போய்க் காட்ட வேண்டும். அவரைக் கூப்பிடுங்கள் இல்லாவிட்டால் அவர் இருக்கும் இடத்தையாவது காட்டுங்கள். நான் போய் நேரில் சொல்லுகிறேன்' என்றார். அவரது விபரீதமான சொற்களைக் கேட்கவே, அண்டையிலிருந்த வீட்டார் எல்லோரும் பெருத்த கும்பலாக வந்து தெருவில் கூடிவிட்டனர். அவ்விடத்திலிருந்த மனிதர் களுள் ஒருவரே அந்த ஊரின் கிராம முனுசீப்பாதலால், அவர் திவான் சாமியாரைப் பார்த்து, "சாமியார் ஐயா! நான் தான் கிராம முனிசீப்பு என்ன அபாயம் நேர்ந்தது? யார் இறந்து போனது?” என்று மிகுந்த ஆவலோடும் பதைபதைப்போடும் கூறி வினவினார். உடனே திவான் சாமியார் முன்னிலும் பன்மடங்கு அதிகமாகத் துடிதுடித்து, "நீங்கள் தான் கிராம