பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 செளந்தர கோகிலம் விசனப்பட்டாரென்றும் சொன்னிரே! ஐயாவைப் புலியடித்தால், அம்மாள் வரவேண்டாமா?’ என்றார். வேலாயுதம், "இந்த திருவனந்தபுரத்தில் அவர்களுக்கு யார் இருக்கிறார்கள்? இங்கே எதற்காக அந்த அம்மாள் வருகிறது? திவான் தான் எலும்புக்குக்கூட வழி இல்லாமல் மாயமாய் மறைந்து போய்விட்டாரே! அந்த அம்மாள் வந்து திருவனந்த புரத்திலுள்ள திவானுடைய மாளிகையைக் கட்டிக் கொண்டு அழுகிறதா? கிழவர்கூட இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கே வந்தது அநாவசியமென்று நினைக்கிறேன். இவ்வளவு பெரிய மனிதரான திவான் இருந்து இறந்த இடத்திற்கு அவருடைய மனுஷ்யாள் யாரும் வந்து அவர் என்ன விதமாக இறந்தார் என்பதைக் கூடத். தெரிந்து கொள்ளவில்லையென்று ஜனங்கள் சொல்ல மாட்டார்களா? அதற்காக அவர் வந்திருப்பார். எதையும் நேரில் வந்து பார்த்தால்தானே அவருக்கும் விஷயம் நிச்சயப்படும். அதுவுமல்லாமல் திவானுக்கு ஏராளமான சொத்து இருக்கிறதாம். அதையெல்லாம் மற்றவர் அபகரித்துக்கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவர் கிழவர் தானே. 10, 12-வயசில் திவானுக்கு ஒரு குழந்தை இருக்கிறானாம். திவானுடைய சொத்தையெல்லாம் பத்திரப்படுத்தாவிட்டால், பையன் ஒட்டாண்டி ஆய்விடுவான் அல்லவா? கிழவர் மாத்திரம் வந்தது சரியான காரியம்” என்றார். அதுவரையில் ஆழ்ந்த யோசனைசெய்பவர் போல் காணப் பட்ட நாராயணசாமி, "வேலாயுதம் சொல்வதெல்லாம் சரிதான். இருந்தாலும், என் மனசில் ஒருவிதமான சந்தேகம் உண்டாகிறது. காட்டில் திவானைப் புலி தூக்கிக்கொண்டு போனபோது அங்கே தற்செயலாய் ஒரு பரதேசி வந்ததாகவும், அவரிடம் திவான் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு மூர்ச்சித்துப் போனதாக வும், பிறகு பரதேசி வந்து தம்மிடம் விவரத்தை தெரிவித்ததாகவும் கிராம முனிசீப்பு எழுதினாரல்லவா? அந்த இடத்தில்தான் இந்தக் கதை அவ்வளவு நம்பிக்கையாகப் படவில்லை. திவானுடைய மோட்டார் வண்டி தவறிப் பள்ளத்தில் வீழ்ந்திருக்கலாம். அப்படி விழுந்த காலத்தில் திவானுக்குப் பலமாக அடிபடாமல் இருக்குமா? அடிபட்டவர் மூர்ச்சித்துப்போகாமல் இருந்திருப் பாரா? அல்லது அவர் தெளிவான அறிவோடு இருந்ததாக வைத்துக்கொண்டாலும், புலி வந்து பாய்ந்து அவரைப் பல்லால் கெளவித் தூக்கிக்கொண்டு போகும் போதே கிலியினால்