பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்கெனை 277 அவருக்கு உடனே உயிர் போய்விடுமே. அந்தச் சமயத்தில் திவான் பரதேசியிடம் தம்முடைய வரலாற்றை இப்படி யெல்லாம் அழகாகச் சொல்லப் போகிறாரா?” என்றார். உடனே வேலாயுதம், 'அப்படியானால் என்னதான் உன்னுடைய யூகம்? திவான் இறக்கவில்லை என்கிறாயா?" என்றான். நாராயணசாமி, "திவான் இறக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை. திவானைப் புலி அடித்திருக்காது. அவர் மோட்டாரிலிருந்து விழுந்து மூர்ச்சித்துக் கிடந்திருப்பார். அந்தப் பரதேசி அதைப் பார்த்து அவரிடம்போய் அவருடைய கைவசத்தில் இருந்த நகைகள் பணம் முதலிய விலைபெற்ற சாமான்களையெல்லாம் அபகரித்து, பத்திரப்படுத்திவிட்டுத் திவானைத் துரக்கிக்கொண்டுபோய் வேறே எங்கேயாவது பள்ளம் படுகுழியில் போட்டு மறைத்துவிட்டு, இவ்விதமான கட்டுக் கதையை முனிசீப்பிடம் சொல்லியிருக்கலாம். நானாயிருந்தால் உடனே அந்தப் பரதேசியைச் சோதனை போட்டுப் பார்த்திருப்பேன்’ என்றார். வேலாயுதம், 'நீ மகா புத்திசாலி அந்தப் பரதேசி அப்படிப் பட்ட திருட்டில் இறங்குகிறவனாயிருந்தால் அவன் பக்கத்து ஊருக்குப் போய், வேறே எவருக்கும் தெரியாமல் தனிமையில் காட்டில் நடந்த விஷயத்தைக் கிராம முனிசீப்பிடம் சொல்லியே இருக்கமாட்டான் பொருளையெல்லாம் அபகரித்துக்கொண்டு சம்சயத்திற்கு இடமில்லாமல் வேறே எங்கேயாவது போயிருப்பான்; இந்த விஷயத்தை எவரிடத்திலும் பிரஸ் தாபிக்கவே மாட்டான்; அவன் எப்போது அவ்வளவு தூரம் போய்ச் சொன்னானோ, அது நிஜமாகவே இருக்கவேண்டும்” ான்றார். அவ்வாறு அவர்கள் அந்தப் பரதேசியைக் குறித்து சம்பாஷித்திருந்தபொழுது அங்கிருந்த மனிதர்கள் எல்லோரும் திவானை அடிக்கடி கபட்டுப் பார்வையாகப் பார்த்தனர். ஆனால், அவர்மீது சந்தேகப்பட்டு அவர்கள் அவ்வாறு பார்க்க வில்லை. அவ்விடத்தில் ஒரு பரதேசி இருக்கையில் நாராயண சாமி இன்னொரு பரதேசியைப் பற்றி இழிவாகப் பேசுகிறாரே