பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்கள் எலி 2ලූ அழைத்து கடற்கரையிலும் மற்ற இடங்களிலும் போய் கற்பக வல்லியம்மாளைத் தேடும்படி அனுப்பிவிட்டு, ஒரு பெட்டி வண்டிக்குக் குதிரையைப் பூட்டச் செய்து, ஆயத்தமாக வைத்து விட்டு உள்ளே வர, அதற்குள் கோகிலாம்பாள், தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, கண்ணபிரானுக்குக் கொடுப்பதற்காக ஏராளமான பழ வகைகளையும், பrண பலகாரங்களையும் எடுத்துப் பெருத்த மூட்டையாகக் கட்டி வைத்துக்கொண்டு புறப்பட்டு வெளியில் வந்து, வண்டிக்குள் ஏறிக்கொண்டாள். தின்பண்ட மூட்டையும் உள்ளே வைக்கப்பட்டன. கண்ண பிரானிடத்திலிருந்து கடிதம் கொண்டு வந்த கோவிந்தசாமியும், வண்டிக்காரன் ஒருவரும் முன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, வண்டி புறப்பட்டது. வண்டியின் கதவுகள் ஜன்னல்கள் முதலியவை நன்றாக மூடப்பட்டு இருந்தமையால், உட்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாதிருந்தது; ஆனால் கோகிலாம்பாள் மாத்திரம் இடுக்குகளால் வெளியில் பார்த்துக்கொண்டே சென்றாள். புரசைப்பாக்கத்திலிருந்து புறப்பட்ட வண்டி, டிராம் வண்டிப் பாதையின் வழியாகவே சென்று ஆனைக்கவுணி யண்டை போயிற்று. அப்போது அவ்விடத்தில் ஆயத்தமாக நின்ற போலீஸ் ஜெவான் ஒருவன் பெருத்த கூக்குரல் செய்து கொண்டு முன்னால் ஓடிவந்து வழிமறித்துக் குதிரையின் முகத்து வாயைப் பிடித்துக் கொண்டு வண்டிக்காரனை தாறுமாறாக வைது, “வண்டியை இடது பக்கமாக ஒட்டாமல் ஏன் வலது பக்கமாக ஒட்டினாய்? ஒட்டு வண்டியை ஸ்டேஷனுக்கு. இந்த வண்டியை சார்ஜ் செய்திருக்கிறேன்' என்று கூறிப் பிடித்து இழுக்க, உடனே கோவிந்தசாமி அவனைப் பார்த்துக் கெஞ்சி, 'ஐயா! ஐயா! என்னவோ தெரியாமல் ஒட்டி விட்டான். கிடக்கிறது விட்டு விடு; உனக்கு ஏதாவது நாஸ்தா செலவுக்குக் கொடுக்கச் சொல்கிறேன். உள்ளே பெரிய மனிதர் வீட்டுப் பெண்பிள்ளை இருக்கிறார்கள். அவர்கள் அவசரமாக ஒர் இடத்துக்குப் போக வேண்டும். ஒரு நிமிஷம் வண்டி இங்கே நின்றாலும், நாங்கள் போகும் காரியம் கெட்டுப் போகும்;