பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செளந்தர கோகிலம் மல் மகா அற்புதமாகச் சிங்காரிக்கப்பட்டிருந்த ஒரு சோபன அறை போலக் காணப்பட்டது. அவ்விடத்தில் ரோஜா, ஜாதி மல்லிகை முதலியவை கூடை கூடையாகப் பரப்பப்பட்டிருந்த ஒரு சொகுசான வில் கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை கோகிலாம்பாளைக் கண்ட வுடனே கட்டுக்கடங்கா மோகாவேசங் கொண்டு கட்டிலை விட்டு இறங்கி, "அடி வாடி! என் கண்ணாட்டி உனக்காக நான் எவ்வளவு நாழிகையாகக் காத்திருக்கிறேன். என் தங்கமே! வா இந்தக் கட்டிலுக்கு” என்று கூறிய வண்ணம் புன்னகை செய்த முகத்தோடு ஒடி வந்து, கோகிலாம்பாளை ஆசையோடு கட்டித்துக்க முயன்றார். (முதல் பாகம் கிறைந்தது)