பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செளந்தர கோகிலம் என்றார். வண்டிக்காரன் சப் இன்ஸ்பெக்டரை நோக்இ வணக்கமாகக் கும்பிட்ட வண்ணம் பணிவாய்ப் பேசத் தொடங்கி, "இல்லீங்க சாமி! நானு சரியாத்தான் ஒட்டிக்கினு வந்தேனுங்க. குருதெ புச்சுங்க, அது என்னாத்தையோ கண்டு மெரண்டு இஸாத்துதுங்க. அப்ப, எதிருலே ரெண்டு மூணுவண்டி சேர்ந்தாப்பலே வந்துடுச்சுங்க, அதுங்களேக் கண்டு குருதெ ரவையூண்டு வடக்காலே நவந்து பூட்டுதுங்க. அம்படத்தானுங்க. நானு ஒனும்னு வலது பக்கமாகவே ஒட்டிக்கினு வரல்லிங்க" என்றான். சப் இன்ஸ்பெக்டர், “அதைப்பற்றி நமக்கு அக்கறை இல்லை. வண்டிக்காரனே வேண்டுமென்று வலது பக்கமாக ஒட்டுகிறானா, அல்லது, அவனை மீறி குதிரையே வலது பக்கமாக இழுத்துக் கொண்டு போகிறதா என்பதை நாங்கள் கண்டுபிடிக்கிறது சாத்தியமான காரியமல்ல. எந்த வகையிலும் வண்டி வலதுபக்கம் வந்தால், அதுவே போதுமானது. ஆகையால், உன்மேல் குற்றம் ஏற்படுகிறது. உன் பெயரென்ன? உனக்கு ஜாமீன் கொடுக்க யாராவது வந்திருக்கிறார்களா?” என்றார். வண்டிக்காரன், “எம்பேரு முருகேஸனுங்க. எனக்கு சாமீனு குடுக்க சானாபேரு இருக்காங்க. எங்க எசமானரு வங்களாவுக்கு வந்தீங்கன்னா, லெச்ச ருவாய்க்கி ஒனுமானாலும் அவுங்களே சாமீனு குடுப்பாங்க. வாங்க போவலாம்” என்றான். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் புரளியாக நகைத்து, "ஒகோ! நாங்கள் உன்னோடு அவர்களுடைய பங்களாவுக்கு வர வேண்டுமோ! எங்களுக்கு இங்கே வேறே வேலை இல்லை யென்று நினைத்துக் கொண்டாயா? அடேய் முருகேஸ்! நாங்கள் யாரும் உன்னோடு வரமுடியாது. யாராவது இங்கே வந்து ஜாமீன் கொடுத்தால், உன்னை விடுகிறோம். இல்லா விட்டால், நீ இங்கேயே லாக்காப்பில் இருக்கவேண்டும்" எனறாா. முருகேசன், 'எசமானே! நீங்க வரமுடியாதுன்னா என்னெயாச்சம் வெளியே உடுங்க. நாம் போயி மணிசரெ இட்டாறேனுங்க” என்று பணிவாகக் கூறினான்.