பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ! மழை காணா இளம்பயிரோ! 55 ஸ்டேஷனில் வைத்திருக்கிறார்கள் என்று விசாரிக்க, அவன் கீழும் மேலும் பார்த்து, சிறிது நேரம் தயங்கி, “நீ யார்? அந்தத் தகவலை நீ எதற்காகக் கேட்கிறாய்?' என்று நிரம்பவும் அமர்த்தலாக வினவினான். வண்டிக்காரன், 'நான் துபாஷ் ராஜரத்தின முதலியார் வீட்டு வேலையாள். அந்த வீட்டு எஜமானியம்மாள் அதோ வண்டியில் வந்திருக்கிறார்கள், கைது செய்யப்பட்டிருக்கும் கண்ணபிரான் முதலியாருக்கு இவர்களுடைய வீட்டுப்பெண்ணைக் கட்டிக்கொடுப்பதாக இருந்தார்கள். அவர்கள் ஏதோ காரியமாக அவரைப் பார்க்க வேண்டுமாம். அவர் இருக்கிற இடம் தெரியவில்லை. உங்களுக் குத் தெரிந்திருந்தால், சொல்லுங்கள்' என்று நயந்துகேட்க, ஜெவான், 'அந்தத் திருட்டு சைனாபஜார் வீதியில் நடந்தது. ஆகையால், அதற்குப்பக்கத்தில் இருக்கும் பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில்தான் அவர் அடைபட்டிருக்க வேண்டும். அங்கே போய் விசாரித்துப் பாருங்கள்” என்றான். அதைக் கேட்டுக்கொண்ட வேலைக்காரன் உடனே வண்டிக்குப் போய்ப் பூஞ்சோலையம்மாளிடம் அந்தச் செய்தியைக் கூற, வண்டியை அங்கே ஒட்டும்படி அந்த அம்மாள் ஆக்ஞாபித்தாள். உடனே வண்டி புறப்பட்டு, அரைநாழிகை நேரத்தில் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கெதிரில் வந்து நின்றது. பூஞ்சோலையம்மாளும் வேலைக்காரனும் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, கோகிலாம்பாள் ஏறிவந்த பெட்டிவண்டி அங்கு எவ்விடத்திலாயினும் நிறுத்தப்பட்டிருக்கிறதோ என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்துத் தமது பார்வையை நாற்புறங்களிலும் செலுத்திப் பார்த்தார்கள். எவ்விடத்திலும் வண்டி காணப்படவில்லை. கோகிலாம்பாள் அப்போது அவ்விடத்தில் இல்லையென்றும், அவள் காலையில் அவ்விடத் திற்கு வந்து கண்ணபிரானைப் பார்த்துவிட்டு வேறு எவ்விடத் திற்கோ போயிருக்கவேண்டுமென்றும் அவர்கள் நிச்சயித்துக் கொண்டார்கள். ஆயினும், அந்த ஸ்டேஷனில் இருந்த போலீசாரிடத்திலாவது கண்ணபிரானிடத்திலாவது விசாரித்துப் பார்த்தால், கோகிலாம்பாள் எங்கே போவதாகச் சொல்லி விட்டுப் போனாள் என்ற தகவலைத் தெரிந்து கொள்ளலாம்