பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 செளந்தர கோகிலம் தங்களது ஜாகைக்குப் போகலாம் என்றும், புறப்பட்டு வரும் படியாகவும் புஷ்பாவதிக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். புஷ்பாவதி அவ்வாறு செய்தி கொண்டுவந்த மனிதனுக்கு பூஞ்சோலையம்மாள், கோகிலாம்பாள் ஆகிய இருவரும் அறியும்படி மறுமொழி சொல்லியனுப்பினாள். கற்பகவல்லி யம்மாள் நிரம்பவும் பரிதாபகரமான நிலைமையில் இருப்பதால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை விட்டு தாம் தமது பங்களா விற்குப் போக மனம் இடம் கொடுக்கவில்லை என்றும், ஆகை யால் தான் அன்றைய இரவு முழுதும் இருந்து மறுநாட் காலையில் புறப்பட்டு வருவதாகவும், அவர் போகலாம் என்றும் புஷ்பாவதி தனது தமயனுக்குச் செய்தி சொல்லியனுப்பியது அன்றி, தானும் சிறிதுநேரம் அவ்விடத்தைவிட்டுப் போய்த் தனது அண்ணனிடத்தில் பேசிக்கொண்டிருந்து அவரை அனுப்பி விட்டு வந்து சேர்ந்தாள். அன்றையதினம் ஏற்பட்ட பெருத்த மான ஹானியில், சுந்தரமூர்த்தி முதலியாரும் அங்கேயே இருக்க வேண்டும் என்று உபசரிக்க பூஞ்சோலையம்மாளுக்கு முகம் இல்லை. அந்த அம்மாளது மனம் சுத்தமாக இடிந்து உட்கார்ந்து போய்விட்டது. ஆகையால், தான் என்ன செய்வது என்பதும் தோன்றவில்லை; பிற மனிதரது முகத்தில் விழிப்பதற்கும் மனம் கூசியது. ஆனால் புஷ்பாவதி மாத்திரம் அவர்களுக்கு அநுகூலமா கவே இருந்து இரக்கமும் அநுதாபமும் அந்தரங்க விசுவாசமும் காட்டி வந்ததைக் கருதி, அவளை அனுப்பிவிட மாத்திரம் விரும்பாமல் இருந்தாள். கண்ண பிரானுக்குப் பரிந்து பேசி வாதாட ஒரு வக்கீலை அமர்த்தும் விஷயத்தில், சுந்தரமூர்த்தி முதலியார் தங்களுக்கு உதவி செய்வார் என்று புஷ்பாவதி காலையில் சொன்ன விஷயம் கோகிலாம்பாளுக்கு நன்றாக நினைவிருந்தது. ஆனாலும் கற்பகவல்லியம்மாளுக்கு ஏற்பட்ட பெருத்த இழிவிற்குப் பிறகு சுந்தரமூர்த்தி முதலியாரது மனநிலைமை எப்படி மாறிப்போயிருக்குமோ என்றும், அவர் தங்களது சம்பந்தத்தை இனி நாடுவாரோ மாட்டாரோ என்றும், தங்களுக்கு உதவி செய்வாரோ மாட்டாரோ என்றும், பலவாறு ஐயமும், அச்சமும், வெட்கமும் அடைந்தவர்களாய் கோகிலாம் பாளும் சுந்தரமூர்த்தி முதலியாரது புறப்பாட்டிற்கு எவ்வித ஆட்சேபணையும் சொல்லாமல் இருந்துவிட்டாள். ஆகவே, அவரும் புறப்பட்டுப்போய்விட்டார். புஷ்பாவதியைத் தவிர மற்ற அயலார் ஒருவர்கூட மிகுதியில்லாமல் எல்லோரும் போய்