பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செளந்தர கோகிலம் தேம்பித் தேம்பி அழித் தொடங்கினாள். தான் சிறிதும் எதிர்பாராவிதமாய் திடீரென்று அங்கே வந்து தோன்றிய பூஞ்சோலையம்மாளையும் வக்கீலையும் காணவே, கண்ண பிரான் திடுக்கிட்டெழுந்தான். தனது நிராதரவான நிலைமையில் கோகிலாம்பாளின் தாயார் தன்னைக் காணும்பொருட்டு சிறைச்சாலைக்கு வந்தது அவனது மனத்தில் அளவற்ற களிப்பையும் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கியது. ஆனாலும், தன்னை நிரம்பவும் கண்ணியமாக மதித்திருந்தவர்களான தன் மனைவியின் வீட்டாரது முகத்தில் தான் எப்படி விழிக்கிறதென்ற அவமானமும் கிலேசமும்தோன்றி அவனது தேகத்தை முற்றிலும் குன்றச் செய்தன. அவனது முகம் வாட்டமடைந்து சூம்பிப் போய்க் கீழே கவிழ்ந்தது. பூஞ்சோலை யம்மாளுடன் வந்திருந்த இன்னொரு மனிதர் யாராக இருக்க லாம் என்றும், அவர்கள் தன்னிடம் என்ன விதமான கேள்வி களைக் கேட்பார்களோவென்றும், தான் நிரபராதியென்பதை எப்படி அவர்களுக்குத் தான் மெய்ப்பிக்கிறது என்றும் சிந்தனை செய்தவனாய் முன்பக்கத்துக் கம்பியண்டை மெதுவாக வந்து நின்றான். உடனே வக்கீல் கண்ணபிரானைப் பார்த்து, “கண்ண பிரான் முதலியாரே இதோ வந்திருக்கும் அம்மாள் யார் என்பது உமக்குத் தெரிகிறதா?’ என்றார் கண்ணபிரான் : தெரிகிறது. இவர்கள் புரசைபாக்கம் துபாஷ் முதலியாரவர்களுடைய சம்சாரம். அவர்களுடைய அடையாளம் நன்றாய்த் தெரிகிறது. நீங்கள் யாரென்பதுதான் தெரியவில்லை. வக்கீல் : நான் வக்கீல். உமக்காக வாதாடுகிறதற்கு என்னை இவர்கள் அமர்த்தி இருக்கிறார்கள். உம்மை ஜாமீனில் விடும்படி நாங்கள் மாஜிஸ்டிரேட்டினிடம் கொஞ்ச நேரத்திற்கு முன் மனுச்செய்து கொண்டோம். அதை அவர் போலீசாருக்கு அனுப்பி இருக்கிறார். நாளையதினம் காலை 11-மணிக்கு அவர் உத்தரவு பிறப்பிப்பார்; அநேகமாய் உம்மை ஜாமீனில் விட்டுவிடுவாரென்று நம்புகிறேன். இந்த வழக்கு சம்பந்தமாக நான் உம்மிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் களையெல்லாம், நான் நாளைய தினம் காலையில் சாவகாச மாய்க் கேட்டுத் தெரிந்துகொள்ளுகிறேன். அதற்கு இப்போது