பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 செளந்தர கோகிலம் வக்கீல் அந்த உருக்கமான வேண்டுகோளைத் தாட்சணிய மின்றி மறுக்கமாட்டாதவராய், "சரி, நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது, நான் உங்களோடு வராமல் வீட்டுக்குப் போவது சரியல்ல. நானும் வருகிறேன். நாம் இப்போது நேராகப் போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குப் போய் விசாரிப் போம், அவருடைய வீடு எங்கே இருக்கிறதோ தெரியவில்லை. நான் இந்தப் பாராக்காரர்களிடம் அதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வருகிறேன். நீங்கள் இப்படி இருங்கள்' என்றுகூறி அவ்விடத்தைவிட்டுப் பாராக்காரர்களண்டை போய்ப் பேசிவிட்டுத் திரும்பிவந்து, "அவருடைய வீடு தங்க சாலைத் தெருவுக்குப் பக்கத்திலுள்ள செங்கான்கடைத் தெருவில் இருக்கிறதாம். போவோம் வாருங்கள்” என்று கூறினார். உடனே எல்லோரும் ஏறி உள்ளே உட்கார, வண்டி புறப் பட்டுத் தங்கசாலைத் தெருவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. வக்கீல் பூஞ்சோலையம்மாளை நோக்கி, “நாம் இப்போது போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசும்போது, நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும். அவர் பேரில் நாம் சந்தேகம் கொண்டு அங்கே வந்திருக்கிறோமென்பது தெரியாதபடி தந்திர மாகப் பேசவேண்டும். பூக்கடை போலீஸ் ஸ்டேஷனிலிருந்தபடி கண்ணபிரான் முதலியார் ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு ஜெவானிடம் கொடுத்தனுப்பியதாகவும், பெண் பெட்டி வண்டியில் வந்த விவரத்தையும், ஆனை கவுனியண்டை நேர்ந்த இடையூறையும், பிறகு பெண்ணை அந்த ஜெவான் அழைத்துப் போனதையும், அதன்பிறகு இதுவரையில் பெண் காணப்படா மலிருப்பதையும் மாத்திரம் சொல்லி, அந்த ஜெவானுடைய அடையாளங்களையும் தெரிவிப்போம்; அந்த ஜெவான் இன்னான் என்பதை அவர் கண்டுபிடித்துத் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும் பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுவோம். அதற்கு அவர் என்ன பதில் சொல்லுகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு யுக்தம்போல நடந்துகொள்வோம்' என்றார். பூஞ்சோலையம்மாள் அப்படியே செய்யலாமென்று மறுமொழி கூறினாள். அரை நாழிகை காலத்தில் வண்டி செங்கான்கடைத்