பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 செளந்தர கோகிலம் ஒரு சங்கதி தெரியவேண்டும். பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில் வேலைசெய்யும் ஜெவான்களிலாவது, இங்கே இவரிடம் வேலைசெய்யும் ஆள்களிலாவது காதில் சிவப்பு கடுக்கன், அம்மைப் புள்ளிகள் விழுந்த முகம் உள்ள மனிதன் எவனாவது இருக்கிறானா? ஜெவான் : (சிறிது நேரம் யோசனை செய்து) இவரிடம் நாங்கள் ஆறுபேர் ஜெவான்கள் வேலை செய்கிறோம். நீங்கள் சொன்ன அடையாளங்கள் உள்ளவன் யாருமில்லை. பூக்கடை ஸ்டேஷனிலும் எனக்குத் தெரிந்த வரையில் அந்த மாதிரியான மனிதன் யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அதை நான் நிச்சயமாய்ச் சொல்வது சரியல்ல. நீங்கள் அங்கே போய் விசாரித்துப் பாருங்கள் என்றான். உடனே வக்கீல் அவ்விடத்தைவிட்டு ரஸ்தாவிற்கு வந்து தாம் தெரிந்து கொண்ட தகவல்களைப் பூஞ்சோலை யம்மாளிடம் தெரிவித்தவண்ணம் வண்டியில் ஏறிக்கொண்டு வண்டியைப் பூக்கடைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒட்டச் செய்தார். வண்டி புறப்பட்டு விசையாகச் சென்று, கால் நாழிகை காலத்தில் அந்த ஸ்டேஷன் வாசலில் போய் நின்றது. வக்கீல் மறுபடி கீழே இறங்கி ஸ்டேஷனுக்குள் நுழைந்து, அவ்விடத்தில் இருந்த ஒரு ஜெவானைப் பார்த்து, “உள்ளே சப் இன்ஸ்பெக்டர் ஐயா இருக்கிறாரா?”. ஜெவான் : இல்லை என்ன விஷயம்? வக்கீல் : பெரிய இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளையைக் கண்டு அவருடன் ஒரு சங்கதியைப் பற்றிப் பேசவேண்டும், இன்ஸ்பெக்டர் இப்போது எங்கே இருப்பார் என்ற விஷயத்தை இந்த ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று வந்தேன். ஜெவான் : பெரிய இன்ஸ்பெக்டர் நேற்று இரவு இங்கே வந்து விட்டுப்போனார். அதன் பிறகு எங்கே போனாரென்பது தெரியாது. அவர் நினைத்த இடத்திற்குப் போவார்; இன்ன இடத்தில்தான் இருப்பாரென்று யாரும் திட்டமாய்ச் சொல்ல