பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 81 மனம் ஒரே திகிலும், குழப்பமும், கவலையும், கலவரமுமே வடிவாய் நிறைந்து போய்விட்டது. கோகிலாம்பாளைக் காணாமல் தான் அந்த இரவை எப்படிக் கழிக்கிறது, அந்தப் பெருந்துயரத்தையும் வேதனையையும் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறது என்ற மலைப்பும் கவலையும் அப்போதே அபரிமிதமாய்ப் பெருகி வதைக்கலாயின. ஆயினும், அதற்குமேல் தான் செய்யக் கூடிய முயற்சி ஒன்றுமில்லையென்ற எண்ணமும், தான் அந்த வக்கீலை உபத்திரவிப்பது மரியாதையல்லவென்ற எண்ணமும் தோன்றின. ஆகவே, அந்த அம்மாள் அவருக்கு மறுபடியும் ஒரு பெருத்த பணத்தொகையை எடுத்து வழங்கி, மறுநாள் காலையில் அவர் அவசியம் தனது பங்களாவிற்கு வரவேண்டுமென்ற உறுதி மொழியைப் பெற்றுக்கொண்டபின் அவரை அனுப்பிவிட்டு வண்டியில் உட்கார்ந்து கொண்டாள். கோகிலாம்பாள் மாயமாய் மறைக்கப்பட்டுப் போனதைக் குறித்துப் பூஞ்சோலையம்மாள், வேலைக்காரன் முதலியோர் விசனக் கடலில் ஆழ்ந்து உயிரற்ற சவங்கள் போலத் துவண்டு அப்படியப்படியே வண்டியில் ஏங்கிக் கிடந்ததற்கு இணங்க, வண்டியின் குதிரையும், கோகிலாம்பாளைக் குறித்துத் துயருறுகின்றதோ என்று நினைக்குமாறு தளர்ந்து ஒய்ந்து தள்ளாடித் தூங்கி வழிந்து கொண்டு பங்களாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. - 女 ★ 女 நாம் இந்த அதிகாரத்தை முடித்து அடுத்த அதிகாரத்தைத் தொடங்குமுன் இன்னொரு சிறிய வரலாற்றைக் கூறுவது அவசியம். ஆதலால், அதையும் சுருக்கமாக விளக்குவோம். அன்றையதினம் காலையில் கோகிலாம்பாள் தங்களது பங்களா விலிருந்து புறப்பட்டுப் போவதற்குச் சிறிது நேரத்திற்குமுன், புஷ்பாவதியம்மாள் வெளியில் போய் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாருடன் பேசிக்கொண்டிருந்து அவரை அனுப்பிவிட்டு வந்தாளென்று சொன்னோம் அல்லவா? அந்த இளைய ஜெமீந்தார் கோகிலாம்பாளை முதலில் மணந்து அதன் பிறகு செளந்தரவல்லியையும் கலியாணம் செய்துகொண்டு, அவர்கள் இருவரது அபாரமான சொத்துக்கள் யாவும் தமக்கே வந்து செ.கோ.H-6