பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 செளந்தர கோகிலம்

போனவன் திரும்பிவந்து பார்த்தானாம். வண்டியும் இல்லை; அதற்குள்ளிருந்த கோகிலாம்பாளும் காணப்படவில்லை. அவன் உடனே திகிலடைந்து திகைத்துப்போய் அங்குமிங்கும் ஒடித் தேடிப் பார்த்தானாம். கடைசியில் தெற்குத் திக்கில் ஒட்டமாக ஒடி நம்முடைய பங்களாவுக்கு வந்து இந்தச் சங்கதியைச் சொன்னான். அதைக்கேட்ட என் தேகம் பதறிப்போய்விட்டது. கோகிலாம்பாள் எவ்வளவுதான் நம்முடைய கண்ணியத்திற்குக் குறைவான காரியங்களைச் செய்தாலும் அவள் என் கண்மணி யான செளந்தரவல்லியம்மாளின் அக்காள். ஆகையால் அந்த அபாய சமயத்தில் அவளைக் கைவிடுவது நியாயமல்லவென்று நினைத்து, என்னுடைய மனவுணர்ச்சியை அடக்கிக்கொண்டு, உடனே ஒர் ஆளுடன் புறப்பட்டு ஸாரட்டில் ஏறிக்கொண்டு வெகுதுரம் ஒடி துப்பு விசாரித்து அவளைத் தேடியதில், மயிலாப்பூருக்கு அப்பால் தாழைப் புதர்கள் நிறைந்த மணல் கட்டில் நாலைந்து முரட்டுச் சிப்பாய்கள் அவளைக் கொண்டு போய் வைத்துக்கொண்டு பலாத்காரம் செய்துகொண்டிருந்த தைக் கண்டேன். நான் என் உயிருக்குத் துணிந்துபோய் விழுந்து அத்தனை சிப்பாயிகளையும் அடித்துத் துரத்தினேன். மயங்கி உணர்வற்றுக்கிடந்த கோகிலாம்பாளை நான் உடனே தூக்கிக் கொண்டு ஒடி வண்டியில் போட்டுக்கொண்டு இங்கே வந்து சேர்ந்து அவளுக்குரிய உபசரணைகளைச் செய்து அவளுடைய மயக்கம் தெளியும்படி செய்தேன். ஆனாலும், அவள் நிரம்பவும் துர்ப்பலமான நிலைமையில் இருந்தாள். ஆகையால் அவளை உடனே அவ்விடத்திற்கு அழைத்து வரக்கூடவில்லை. காலையில் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குள் அவளை என்ன செய்தார் களோ பிறகு அந்த முரட்டுச் சிப்பாயிகள் அவளை என்ன செய்தார்களோ எதையும் நான் இப்போது நிச்சயமாகச்சொல்ல முடியவில்லை. அவளும் உண்மையை உள்ளபடி சொல்வாள் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ ஜீவகாருண்யத்தை உத்தேசித்தும், நமது கண்ணாட்டி செளந்தராவைக் கருதியும் அவளுக்கு நான் உதவி செய்தேன். ஆனாலும், அவளுடைய உடம்பைப் பார்க்கவே எனக்குக் கூசுகிறது. அந்த உடம்பு எவ்வெவ்வகையில் மானபங்கப் பட்டதோ தெரியவில்லை. அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரஸ்திரிகளைக் கெடுப்பதில்