பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 97

தான் இருப்பாளோ என்ற சந்தேகம் பலமாக எழுந்து என்னை வதைத்துக்கொண்டே இருந்தது. இன்று பிற்பகல் நான்குமணி சுமாருக்கு நான் டெலிபோனில் உன்னோடு பேசினேனல்லவா.

போனேன். செளந்தரவல்லியம்

டெலிபோனைவிட்டு அப்பால் மாளின் காசாரி மினியன் வந்து நின்றான். அவனுடைய உடம்பு துடிக்கிறது; முகம் சகிக்கமுடியாத ஆவலைக் காட்டுகிறது; அவன் பேச ஆரம்பித்தால் வாய் குழறிப் போகிறது. ஏதோ பெரிய அபாயத்தில் மாட்டிக் கொண்டவன்போல அவன் திருட்டு விழி விழிக்கிறான். அவன் வருவானென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆகையால், அவனைக் கண்டவுடன் நான் திடுக்கிட்டுப் போனேன். என் மனசில் பெருத்த திகில் உண்டாகிவிட்டது. “என்னடா மினியா? எங்கே வந்தாய்? என்ன விசேஷம்?’ என்று நான் ஆவலோடு கேட்டேன். உடனே அவன் தான் வந்த காரணத்தை எடுத்துச் சொன்னான். கோகிலாம்பாள் இன்று காலையில் பங்களாவைவிட்டுப் புறப்பட்டாளல்லவா, புறப் பட்டவள் எங்கெங்கோ போய்த் தனிமையில் அலைந்தாளாம். அவளுடைய பெட்டி வண்டியை ஒட்டிக்கொண்டுபோன முருகேசன் ஆனைகவுணியண்டை இறங்கி ஒரு ஜெவானோடு எங்கேயோ போய்விட்டானாம். அதன் பிறகு கோகிலாம் பாளுடைய வண்டியை வேறே யாரோ ஒருவன் ஒட்டிக் கொண்டு போனானாம். அங்கே தற்செயலாக வந்த மினியன் வண்டிக்குப் பின்னாகவே போனானாம். கோகிலாம்பாள் தன்னுடைய கையில் பrண பலகாரங்களையெல்லாம் பெருத்த மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு சென்னை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குள் இருந்துவிட்டுத் திரும்பி வெளியில் வந்தபோது கையில் பலகார மூட்டை இல்லையாம். முருகேசனுக்குப் பதிலாகத் தான் வண்டியோட்ட வந்திருப்பதாய் மினியன் அவளிடம் சொன்னானாம். பிறகு அவள் வண்டிக்குள் உட்கார்ந்துகொள்ள மினியன் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தானாம். வண்டி கோட்டைக்குப் பக்கத்தில் சமுத்திரக்கரை ஓரமாய் இருக்கும் பாலத்தண்டையில் வந்தவுடன் மினியன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி ஏதோ தேக பாதையினால் பாலத்தண்டையில் போனானாம். Gl.II.iii-7