பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 செளந்தர கோகிலம்

மனத்தை உருக்கிக் கொண்டே இருந்தன. தாம் அவர்களை மறந்துவிடவேண்டுமென்று அவர் எவ்வளவோ முயன்று பார்த்தார். ஆனாலும், அந்த முயற்சி சிறிதும் பலியாமல் போன தன்றி எதிர்மறையான பலனையே கொடுத்துக் கொண்டிருந்தது. தமது பிரயாண சமயங்களில் திடீரென்று அழகிய ஸ்திரிகள் எவரேனும் அவரது திருஷ்டியில் படுவார்களாயின், அவர்களைத் தாம் பார்த்தால் தமது காந்திமதியம்மாளது நினைவு வந்து வருத்தப் போகிறதே என்ற நினைவினால் அவர் எந்த ஸ்திரீயையும் கண்ணெடுத்துப் பார்ப்பதே கூடாதென்பதை ஒரே பிடிவாத விரதமாக அநுஷ்டித்து வந்தார். அவர் அவ்வாறு செய்து வந்தது காந்திமதியம்மாளைப் பற்றி அவரது மனம் ஓயாமல் நினைத்து வருந்திப் புண்பட்டிருந்தது அதிகரிக்காமல் இருப்பதற்கு அநுகூலமாக இருந்தது. ஆயினும், பத்துப் பன்னிரண்டு வயதுள்ள அழகிய குழந்தைகள் தமக்கு எதிரில் போவதையாகிலும், விளையாடுவதையாகிலும், அல்லது பேசுவதையாகிலும் அவர் கண்டுவிடுவாரானால், அவரது மனம் உடனே பொங்கித் தவித்துப் போகும். அவரது கண்களிலிருந்து கண்ணிர் மாலை மாலையாய்ப் பெருகி வழியும். அவர் தமது அருங்குணப் புதல்வனான ராஜாபகது.ாரை நினைத்துக் கட்டிலடங்காமல் தேம்பித் தேம்பி அழுவதால் துக்கம் அவரது நெஞ்சை அடைத்துக் கொள்ளும். அவர் உடனே வாய்விட்டுத் தமக்குத் தாமே புலம்பத் தொடங்குவார். அவரது தேகம் பதறி ஆடும். “ஐயோ! என்னப்பா என் கண்மணியே! உன்னை நான் காணும்போதெல்லாம் என் மனம் அப்படியே பூரித்துப் பொங்கி விடுமே உன்னை நான் என் முன்னோரின் தவப் பயனென்று எண்ணி எண்ணிப் பரவசமடைவேனே! ஐயோ! என் செல்வச் சீராளா! உன் முகத்தை நான் மறுபடியும் என் கண்களால் காணப் போகிறேனா இந்தக் கட்டை இனி அதிக காலம் இந்த மண்ணில் நிலைத்து நில்லாது போலிருக்கிறதே! உன் முகத்தை நான் பார்க்காமலேயே இறந்து போய் விடுவேனோ ஐயோ! ஈசுவரா பரம தயாளுவே! என்னப்பனே! எவருக்கும் கிடைக்காத பேரின்பத்தை அந்தக் குழந்தையின் மூலமாய் எனக்குக் காட்டி மறைத்துவிட்டாயே! அவ்வளவு கொடுமையாக என்னைத் தண்டித்து ஒறுப்பதற்கு நான் உன் விஷயத்தில் என்ன அபசாரம்