பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 செளந்தர கோகிலம்

போயிடிச்சின்னு முடிவுகட்டி, பாடையிலே வச்சு, கொட்டு முழக்கோடே கொண்டாந்து நெருப்பு வச்சுட்டு இப்பதாம் போறாங்க. எசமானுக்கு ஒடம்புலே துணிகிணி ஒண்ணுமில்லை, வெடவெடன்னு நடுக்குது. வாங்க நான் எசமானே ஊட்டுலே கொண்டாந்து உட்டுட்டுப் போறேன்” என்று உருக்கமாகவும் வாஞ்சையாகவும் சொன்னான். அவனுடைய உண்மையான பிரியத்தைக் காண என் உள்ளம் பூரித்தது. நான் நிரம்பவும் சந்தோஷமடைந்து அவனைப் பார்த்து, “அப்பா காத்தான்! நான் நிர்வாணமாய் இருக்கிறேன். இப்படியே ஊருக்குள் வரவெட்கமாக இருக்கிறது. நீ உடனே எங்கள் வீட்டுக்கு ஒடி, நான் பிழைத்துக் கொண்டேனென்ற சந்தோஷ சங்கதியைச் சொல்லி, இரண்டு துணிகளோடு யாரையாவது உடனே இங்கே அழைத்துக் கொண்டு வா’ என்றேன். காத்தான் உடனே என்னுடைய வீட்டுக்குப் போய் அரை நாழிகை கழித்துத் திரும்பி இரைக்க இரைக்க ஓடிவந்தான். அவனுடன் வேறே யாரும் வரவில்லை. அவனுடைய கையில் ஒரு சிறிய மூட்டை இருந்தது. நான் பிழைத்துக் கொண்டேனென்ற சங்கதியைக் கேட்டு ஜனங்களெல்லோரும் ஆசையாக ஓடி வருவார்கள் என்று நான் நினைத்ததற்கு இது முற்றிலும் மாறாக இருந்ததன்றி, நான் கட்டிக்கொள்ளும் துணியை அவர்கள், பிணம் சுடும் தோட்டியிடம் கொடுத்து அனுப்பியதும் எனக்கு ஆச்சரிய மாகவும் ஆயாசமாகவும் இருந்தது. நான் உடனே அவனைப் பார்த்து, “என்னடா காத்தான், வேறே யாரும் வரவில்லையா?” என்றேன். அவன் நிரம்பவும் துக்கமான குரலோடு பேசத் தொடங்கி, எசமானே! நானு இந்த அக்கரமத்தெ என்னான்னு சொல்வேனுங்க! எசமான் எறந்து போயிட்டீங்கன்னு ஒங்களோடே சம்சாரம் சொந்தக்காரரு எல்லாரும் மோதியடிச்சு அளுது பெரண்டுக்கிட்டுக் கெடந்தாங்க, ஐயோ! எங்க மவராசன் போயிட்டாரே! இன்னமே அவரேக் காணப்போறமா? இன்னு பொலம்பினாங்க. அப்ப நான்போயி இந்த மாதிரி நீங்க பொளச்சு உசிரோட இருக்கிறீங்கன்னு சொன்னேன். அப்ப எசமானுடைய சம்சாரமும் இன்னும் ரெண்டு மூணு பேரும் இருந்தாங்க. எசமானொட சம்சாரம், அடே காத்தான்! பொணத்துக்கு எப்பவாவது உசிரு வந்ததுண்டா. நரம்பு முறுக்கு