பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 செளந்தர கோகிலம்

எங்கேயாவது போயிருக்க விரும்புகிறீர்களா என்பது தெரிய வேண்டும்” என்றார்.

குஞ்சிதயாத முதலியார், “நான் இனி அந்தத் திருவட மருதூருக்குள் நுழையப் போகிறேனா? அந்த ஊர்க் கோவிலின் சுவாமி தரிசனம் எனக்கு மறுபடி இந்த ஜென்மத்தில் கிடைக்கப் போகிறதா? நான் உண்மையிலேயே இறந்து போய்விட்டதாக அந்த ஊரார் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே! இந்த நிலைமையில் நான் அங்கே போவது அவ்வளவு உசிதமாகப் படவில்லை. இதோ பக்கத்தில் திருவையாறு என்ற ஒரு புண்ணிய rேத்திரம் இருக்கிறது என்று ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். அந்த ஊரில் தங்கி பஞ்சநதிசரையாவது தினம் தினம் தரிசித்து என் வாழ் நாளை இனியாவது நல் வாழ் நாளாய்க் கடத்தலாம் என்று நினைக்கிறேன். அந்த ஊரில் ஒர் இடம் அமர்த்திக் கொண்டு அவ்விடத்தில் இருப்போம்” என்றார்.

திவான் சாமியார், “சரி; இப்பொழுது சொற்ப கால ஏற்பாடாக நாம் திருவையாற்றில் ஜாகை வைத்துக் கொண்டு இருந்து வருவோம். நீங்கள் திருவடமருதூர் சுவாமியை மறுபடி தரிசிக்க வேண்டுமென்று மனப்பூர்வமான ஆர்வம் கொண்டு வருந்துகிறீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியாமல் போகாது. உங்களுடைய களங்கமெல்லாம் விலகும்படிச் செய்து, உங்களை அவ்விடத்திற்கு வரவழைத்துக் கொள்வது அவருக்கு ஒரு பெரிய காரியமல்ல. அவர் எப்படியும் உங்களுடைய கோரிக்கையைப் பூர்த்தி செய்து வைப்பார் என்றே நான் நம்புகிறேன். அதைப் பற்றி நீங்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். அது ஒருபுறமிருக்க, இன்னம் முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் ஆசை கொள்ளுகிறது. என்னைவிட வயசில் எவ்வளவோ பெரியவர்களான உங்களிடம் அதைப்பற்றி எப்படிப் பிரஸ்தாபிக்கிறதென்று நான் அஞ்சுகிறேன். உங்களுடைய அநுமதி கிடைத்தால், அதை நான் பிரஸ்தாபிக்கிறேன்” என்றார். குஞ்சிதபாத முதலியார், “என்னப்பனே! எந்த்ெந்தத் தகவல் உனக்குத் தெரியவேண்டுமோ அதையெல்லாம் கூசாமல் நீ