பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 செளந்தர கோகிலம்

போலவும், தாம் கிழவரது வைத்தியத்தைக் கருதி அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் காட்டிக் கொண்டார். ஏனெனில், உலகைத் துறந்த யோகீசுவரரும், இளைத்து மெலிந்து பிச்சைக்காரரைப் போலிருந்த கிழவரும் புதிதாக அவ்வளவு ஆடம்பரமான காரியங்களைச் செய்து கொள்வதை உணர்ந்தால், ஜனங்கள் அதைப்பற்றிப் பலவாறாக சந்தேகங்கொண்டு, தம்மைப்பற்றி ஏதேனும் தப்பான அபிப்பிராயம் கொள்வதோடு, ரகசியத்தில் தங்களது செய்கைகளைக் கவனிக்கத் தொடங்குவார்கள் என்ற முன் யோசனையினால் திவான் அவ்வாறு எச்சரிக்கையாக நடந்து கொண்டார்.

ஒருவார காலத்திற்குள் கிழவருக்குச் சகலமான வசதிகளும், செளகரியங்களும் ஏற்பட்டுப் போயின. தாம் இனி கடைத்தேறப் போவதில்லையென்றும், தமக்கு உலகில் யாரும் நாதியில்லை யென்றும் நினைத்து ஒரு வாய்த் தண்ணிர் கொடுப்பாரும், “நீ யார்” என்று கேட்பாருமின்றி மனத் தளர்வும், பெருத்த ஏக்கமும், அவ நம்பிக்கையும், விரக்தியும் அடைந்து உழன்று கிடந்த கிழவருக்குத் தமது புத்திரரே நேரில் வந்தது போலத் தமக்கு ஒர் ஆப்த பந்து கிடைத்து விட்டார் என்ற எண்ணமும், அவரிடம் தமது குமாரருடைய பணம் ஏராளமாக இருக்கிற தென்ற எண்ணமும், அதை யெல்லாம் வேண்டுமானால் அவர் தம்பொருட்டுச் செலவிடக்கூடிய பரம தயாள குணம் வாய்ந்த வராய் இருக்கிறார் என்ற எண்ணமும் உண்டாகவே, அவருக்கு ஒர் யானையின் பலம் உண்டாய் விட்டதென்றே கூறலாம். முக்கியமாக அவரது மனதில் திடீரென்று ஏற்பட்ட மாறு பாடென்றே அவரது தளர்விலும், இளைப்பிலும் பெரும்பாகத்தை உடனே விலக்கியதன்றி பெருத்த மனோதிடம் உற்சாகம் சந்தோஷம் முதலியவற்றை உண்டாக்கி விட்டது. அதுவன்றி, வைத்தியரது சிகிச்சைகளும், மற்ற போஜனபானாதி வசதிகளும் சக ஜீவனமும் ஒன்று கூடி அவருக்கு வெகு சீக்கிரத்தில் புத்துயிரையும் தெளிவையும் தேக புஷ்டியையும் உண்டாக்கி விட்டன. அதற்குமுன் கோலையூன்றியும், இரண்டொருவர் கைலாகு கொடுக்கப் பெற்றும், தட்டித் தடுமாறி எழுந்து இரண்டோர் அடிகள் வைத்து நடக்கும் நிலைமையில் இருந்த கிழவர் சுமார் 15 - தினங்களுக்குள் அதிகாலையில் எழுந்து