பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 செளந்தர கோகிலம்

கூற, அந்த ஸ்திரீ அவர் அன்றிரவு தங்கள் மனையில் போஜனம் செய்ய வேண்டுமென்று வருந்தி வேண்டிக் கொள்ள, அதற்குத் திவான் சாமியார் இணங்கினார்.

அப்பொழுது மாலை 5-மணி சமயமாயிற்று, தாம் ஆற்றங்கரைப் பக்கம் போய்விட்டு, சாயுங்காலம் சுவாமி தரிசனம் செய்து கொண்டு மறுபடி வருவதாகக் கூறியபின் அவர் அதை விட்டுப் புறப்பட்டார். புறப்பட்டவர் அந்த ஊருக்கு வெளியிலிருந்த பறைச் சேரியை நோக்கிச் சென்று அதற்கருகில் காணப்பட்ட இலுப்பைத் தோப்பில் மாட்டுக்காரப் பையன்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அந்த இடத்திற்குப் போய், அவர்களை நோக்கி, ‘அப்பா குழந்தைகளா இந்தச் சேரியில் காத்தான் என்ற பெயருடைய ஒரு கிழவன் இருந்தானே, அவன் இருக்கிறானா?” என்று அன்பாக வினவினார்.

பெருத்த சாமியாரைப் போலக் காணப்பட்ட நமது திவானைப் பார்த்தது மாட்டுக்காரப் பையன்களது மனதில் ஒருவித வியப்பையும், அவரிடத்தில் பயபக்தி விசுவாசத்தையும் உண்டாக்கியது. விளையாட்டின் இன்டத்திலேயே லயித்துப்போய் அதே கவனமாக ஒடிக்கொண்டிருந்த பெரும்பாலோர் நிற்க, சிலர் அவரண்டை நெருங்கிவந்து சிறிது விலகிப் பணிவாக நின்று வணக்கமாக அவருக்கு மறுமொழி தரத் தொடங்கினர். அவர்களுள் ஒருவன், ‘சாமியாரையா! நம்ப வெட்டியாரக் காத்தானையா கேக்கிறீங்க ஊட்டுலேதான் இருக்கறானங்க சாமியாரே! போயி அளெச்சாரட்டுங்களா அவங்கிட்ட ஏதாச்சும் சோலியா வந்தீங்களா? நீங்க யாருன்னு சொல்லறது? என்றான்.

அதைக்கேட்ட திவான் சாமியார், ‘அப்பா இந்த ஊர்ச் சுடுகாட்டில் வெகுகாலமாய் அவன் வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். அந்த காத்தானைத்தான் நான் பார்க்க வேண்டும். இப்போதுகூட அவன்தானே அந்த அலுவலைப் பார்க்கிறவன்’ என்றார். அவருடன் பேசியவன், “ஆமாஞ்சாமீ. அந்தக் காத்தானெத்தான் நானும் குறிக்கறேனுங்க. அவந்தானுங்க இப்பவும் அந்த அலுவலெப் பாக்கறானுங்க, ஆனா அவுனுக்கு ரொம்ப