பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 செளந்தர கோகிலம்

இன்னும் எல்லாப் பெயர்களையும் இப்படியே அர்த்தமில்லாமல் மாற்றி உபயோகிப்பதில் மகா நிபுணர்கள். ஆதலால், கிரிஸ்டியானிடி என்பது ஒருவேளை கிருஷ்ணநீதியாக இருக்கலாம், ஏககிறிஸ்து என்பதை எசோதை கிருஷ்ணனாக இருக்கலாம், யூதர் என்பது யாதவராக இருக்கலாம், யோசெப் என்பது வாசுதேவராக இருக்கலாம். மேரி என்பது மாரியம்மனாக இருக்கலாம், காட் என்பது கடவு(ள்)லிருந்து வந்ததாக இருக்கலாம் என்று அவர் கிருஸ்துவ மதத்திற்கும் ஹிந்து மதத்திற்கும் ஒற்றுமை கண்டுபிடித்துக்கொண்டே போவார். அதுபோலவே அவர் இஸ்லாமிய மதத்திற்கும் ஹிந்து மதத்திற்கும் பலவகைப்பட்ட ஒற்றுமைகள் கண்டுபிடிப்பார். மாசி மாதத்தில் ஷாப்ராத் என்று மகம்மதியர்கள் ஒரு நோன்பை அநுஷ்டிப்பதுண்டு. அதற்குக் கடவுளின் இரவென்று பொருளாம். அதுபோலவே, ஹிந்துக்கள் அந்த மாதத்தில் சிவராத்திரி என்று ஒரு நோன்பைக் கொண்டாடு கிறார்கள். அதற்கு அடுத்த பங்குனி மாதத்தில் இஸ்லாமியர் ரம்ஜான் என்று கொண்டாடுகிறார்கள். அது ஒரு வேளை ராம்ஜன் ஆக இருக்கலாம். ஏனெனில், ஹிந்துக்கள் ராமஜனனம் என்ற திருவிழாவை நடத்துகிறார்கள். இன்னும் ஆவணி புரட்டாசி மாதங்களில் இஸ்லாமியர் முகரம் என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஹிந்துக்களோ மகார் நோன்பு என்று கொண்டாடுகிறார்கள். இன்னும் இவை போலவே இரண்டு மதங்களிலும் பல நெருங்கிய ஒற்றுமைகள் இருக்கின்றனவென்றும், இவைகளும் அடிப்படையில் ஒன்றுதா னென்றும் நாடாரவர்கள் தனக்குள் பலவிதமான முடிவுகளைச் செய்து கொண்டிருப்பார். ஆகவே, அவரது மனப்போக்கு எந்தக் கொள்கையையும், எந்த மதத்தையும் இழிவு படுத்தாமலும், வெறுக்காமலும், எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது என்றும், எல்லாம் ஸாரத்தில் ஒன்றேயானாலும் பெயரில் மாத்திரம் வேறாயிருக்கிறதென்றும் சமரஸ் ஞானமும் நடுநிலைமையும் வகிப்பதாக இருந்து வந்தது.

அத்தகைய கனவானிடம் குஞ்சிதபாத முதலியாரது மனு வந்து சேரவே, அவர் அதைப் படித்துப் பார்த்து, சகிக்க வொண்ணாத வியப்பும் பிரமிப்பும் அடைந்தார். ஹிந்துக்களின் மதாசார சம்பிரதாயங்களில் அன்னிய மதத்தினரான தாம்