பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 செளந்தர கோகிலம்

உடனே கலெக்டர், “சரி, நீங்கள் இதோ பக்கத்தில் இருக்கும் அறைக்குள் போய் கொஞ்சநேரம் உட்கார்ந்து கொண்டிருங்கள் நான் கூப்பிடும்போது மறுபடி இங்கே வாருங்கள்” என்று கூறி அவரைப் பக்கத்திலிருந்த அறைக்குள் அனுப்பியபின், தமது சிரஸ்ததாரைக் கூப்பிட்டு, ஜன்னலுக்கு வெளியில் நின்ற மனிதரை உள்ளே அழைத்து வந்து தமக்கெதிரில் நிறுத்தும்படி கட்டளை இட, சிரஸ்ததார் அப்படியே செய்தார்.

தம்மை இன்ன விஷயத்திற்காகக் கலெக்டர் வரவழைத் திருக்கிறார் என்பதைச் சிறிதும் யூகிக்கமாட்டாதவராய் முற்றிலும் கலங்கி பீதி கொண்டு வந்து நின்ற கிராம முனிசீப்பை நோக்கிக் கலெக்டர் பல கேள்விகள் கேட்டு அவரது பெயர், உத்தியோகம், குடும்ப வரலாறுகள் முதலிய விஷயங்களை அவர் வெளியிடும்படி செய்தார். அவர் கூறிய தகவல்களும் குஞ்சிதபாத முதலியார் தகவல்களும் சிறிதும் வேறுபாடின்றி ஒன்றாகவே இருந்தன.

உடனே கலெக்டர் அவரை நோக்கி, ‘ஐயா! சுமார் மூன்று வருஷ காலத்திற்கு முன் நீர் வசூல் செய்து வைத்திருந்த சர்க்கார் கிஸ்திப்பணத்தில் ஒர் ஆயிரம் ரூபாயை உம்முடைய தம்பி உமக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய்க் கும்பகோணத்தி லுள்ள ஒரு தாசிக்குக் கொடுத்துவிட்டாரே. அதுபோலவேதான் அவர் இன்னமும் செய்துகொண்டு வருகிறாரா அல்லது அதன் பிறகாவது ஒழுங்காக நடந்து கொள்ளுகிறாரா?” என்றார்.

கலெக்டர் கூறிய வார்த்தைகள் கிராம முன்சீப்பின் மனதில் பெருத்த இடி வீழ்ந்தது போன்ற திகிலையும் நடுக்கத்தையும் உண்டாக்கிவிட்டன. தங்களது குடும்பத்தில் பரம ரகளிலியமாக நடந்த அந்தச் சம்பவத்தைக் கலெக்டர் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார் என்ற மலைப்பும் பிரமிப்பும் தோன்றி அவர் ஊமைபோல விழிக்கும்படிச் செய்துவிட்டன. சர்க்கார் கிஸ்திப் பணத்தை தாம் அஜாக்கிரதையாய் வைத்திருந்ததாகக் கலெக்டர் தம்மீது குற்றம் சுமத்துவாரோ என்ற கவலையும் அச்சமும் எழுந்தன. ஆதலால், அதற்குத் தாம் எவ்விதமான மறுமொழி சொல்வதென்பதை அறியமாட்டாமல் அவர் தயங்கித் தயங்கி மென்று விழுங்கியபடி நின்றார்.

உடனே கலெக்டர், ‘ஏன் ஐயா! சும்மா நிற்கிறீர்? குடும்பத்தில் ரகளியமாக நடந்த விஷயம் இந்தக் கலெக்டருக்கு