பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iS6 செளந்தர கோகிலம்

கலெக்டர் என்ன கருத்தோடு தம்மிடம் அவ்விதமான கேள்விகளைக் கேட்கிறார் என்பதை அறியாமல் அஞ்சி முற்றிலும் கலங்கிப் போன கர்ணம் நடுநடுங்கி, “நானாக எதற்கும் போய் மேல் விழுகிறதில்லை. ஜனங்கள் பிரியப்பட்டு என்னிடம் வந்து பத்திரம் எழுதும்படி கேட்டுக் கொண்டால், நான் எழுதிக் கொடுப்பேன். அவர்கள் பணங்கொடுத்தால் வாங்கிக் கொள்ளு கிறது. இல்லாவிட்டாலும் நான் கேட்கிறதில்லை,” என்றார்.

கலெக்டர் வேடிக்கையாகச் சிரித்து, “நீர் பேசுவதே வேடிக்கையாக இருக்கிறதையா! பத்திரம் எழுதுகிறவர்களுடைய சம்மதம் இல்லாமல் நீரே போய் எழுதிவிட்டீரென்று இப்போது யாராவது சொன்னார்களா? பத்திரம் எழுதிப் பணம் சம்பாதிப்பதுண்டா என்றால், அதற்கு, “ஆம் உண்டு” என்று ஒரே வார்த்தையாய் மறுமொழி கொடுப்பதை விட்டு ஊரையெல்லாம் வளைத்து ஏன் பேச வேண்டும்? பத்திரம் எழுத வருகிறவர்கள் இஷ்டப்பட்டு வருகிறார்களா, இஷ்டமில்லாமல் வருகிறார்களா என்ற கேள்வியே இப்போது உண்டாகவில்லையே. அது போகட்டும். இன்னும் வேறு எந்த விதத்திலாவது நீர் பணம் சம்பாதிப்பதுண்டா? உமக்கு ஜோசியம் தெரியுமா? நீ பிறருக்கு ஜோசியம் சொல்லி அதனால் ஏதாவது பணம் சம்பாதிப்பதுண்டா அல்லது சம்பாதித்ததுண்டா?” என்றார்.

அதைக்கேட்ட கர்ணம், “அடாடா இதென்ன விபரீதமாக இருக்கிறதே! எனக்கு ஜோசியமே தெரியாதே. நான் ஜோசியம் சொல்லிப் பணம் சம்பாதிக்கிறதாக யாரோ தங்களிடம் வந்து பொய் சொல்லி இருக்கிறார்களே! என்று கூறி நிரம்பவும் தாபந்திரியமாகக் கைகளை விரித்து நடனம் செய்தார்.

அதைக்கண்ட கலெக்டர் கலகலவென்று சிரித்து, ‘என்ன ஐயா இப்படியெல்லாம் மாயஜாலம் செய்தால், உண்மையைப் பொய்யாக்கி விடமுடியுமா? நான் சாட்சியாக சொல்லுகிறேன். கேளும். சுமார் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு உங்கள் ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் உம்மை அவருடைய மாளிகைக்கு வரவழைத்து, தனியான ஒர் அறைக்கு கொண்டுபோய் உட்கார வைத்துக் கொண்டு, தமக்கு உடம்பு சரியான நிலைமையில் இல்லை என்றும், தமக்கு அந்தியகாலம்