பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 செளந்தர கோகிலம்

கலெக்டர், “இந்த ஐயாவுக்கு என்ன கதி வந்ததப்பா? நீ சொல்வது எனக்கு விளங்கவில்லையே! விவரமாகச் சொல், என்றார்.

உடனே காத்தான் குஞ்சிதபாத முதலியாரது குடும்ப வரலாறு, அவர் மார்படைப்பினால் ஸ்மரணை தப்பிப் போனது, அவர் சுடுகாட்டில் வைத்துக் கொளுத்தப்பட்ட பின்னர் பிழைத்து எழுந்தது, பிறகு தான் அவரது மாளிகைக்குப் போய்த் திரும்பி வந்து அவரை அனுப்பி வைத்தது முதலிய விருத்தாந்தம் யாவையும் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினான். அதைக்கேட்ட சாகசிகளும் மற்றவரும் குஞ்சிதபாத முதலியார் மீது அளவற்ற இரக்கமும், தயாளமும் காட்டி, அவருக்கு நேரிட்ட மகா துக்ககரமான அவகேட்டைக் குறித்து மிகுந்த விசனமும் அநுதாபமும் கொண்டு கலங்கியுருகித் தவித்து நின்றனர்.

உடனே கலெக்டர், காத்தானை நோக்கி, ‘ஏனப்பா காத்தான்! நெருப்புப் பற்றிக்கொண்டு கொஞ்ச தூரம் எரிவதற்குள் இந்த ஐயா எழுந்து ஜதையை விட்டு இப்பால் வந்துவிட்டதாகச் சொல்லுகிறாயே! அது நிஜமாக இருக்கலாம். எரிந்துபோன இவருடைய எலும்பை எடுத்துக்கொண்டு போய் ஆற்றில் போடவும், இவருடைய சாம்பலைக் கரைத்து விடவும் இவரைச் சேர்ந்த மனிதர்கள் மறுநாள் மயானத்திற்கு வந்திருப்பார்களே. அப்போது அவர்கள் வந்து பார்த்து எவ்வித சந்தேகமும் கொள்ளவில்லையா? அப்பொழுது நீ அவர்களிடம் உண்மையை வெளியிட வேண்டுமென்று நினைக்கவில்லையா?” என்றார்.

காத்தான் “ஆமாஞ்சாe அதுவும் ஒரு கேவிதானுங்க. இந்த எசமான் நெருப்பெ உட்டு இப்பாலெ வந்த பொறவாலே, நானு நெருப்பே கவனிக்கவே இல்லீங்க, கட்டைங்களும் எருமுட்டைங்களும் தானா எரிஞ்சு அடங்கி அவுஞ்சி சாம்பலாப் போயிடிச்சுங்க. மைக்கா நாளு ஐயாவோடெ மாமனாரும் இன்னம் இரண்டொருத்தரும் வந்தாங்க. ஐயா பொளச்சிக்கின சங்கதி அந்த மாமனாருக்கு ராத்திரியே தெரியுமல்ல, அதுனாலே அவுரே தந்தரமா அதுக்கு ஒரு சமாதானம் சொல்லிப் புட்டாரு. ஐயாவோடெ ஒடம்பு ரொம்ப வயசாயி எளச்ச மெலிஞ்சுபோன