பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 செளந்தர கோகிலம்

சுந்தரமூர்த்தி முதலியார், “சரி, நல்ல காரியம், நீ முதலில் ஒரு மாதிரியாய்ச் சொல்லி விட்டபடியால், இனி அதை வேறு விதமாய் மாற்றுவது தப்பு. ஆகையால், இனி அந்த அம்மாள் கேட்டாலும், வேறே யார் கேட்டாலும் நீ முன் சொன்னது போலவே சொல்லவேண்டும். தெரிகிறதா?’ என்றார்.

மினியன், “அப்படியே ஆவட்டுங்க எசமான்’ என்றான்.

சுந்தரமூர்த்தி முதலியார், “அது இருக்கட்டும். நீ வண்டியை இவ்வளவு தூரம் தெற்குத் திக்கில் ஒட்டிக்கொண்டு வந்ததை அம்மாள் கவனித்து ஏதாவது கேள்வி கேட்டார்களா? என்றார்.

மினியன், “இல்லீங்க. ரஸ்தாவெ ரிப்பேரு செய்யுறாங்கன்னு சொல்லிக்கினே நானு தெக்கே சானாதுாரம் வந்துட்டேனுங்க. சன்னலுக் கதவெல்லாம் மூடி இருந்திச்சுங்க. அம்மா என்னமோ ஒரு மாதிரியா வெசனமா குந்திக்கினு என்னாத்தையோ நெனச்சுக்கினு இருந்தாங்க நானு இம்பிட்டுத் தூரம் தெற்கே வந்தத்தே அவுங்க கவுணிக்கவே இல்லீங்க தோப்புக்குள்ளற வந்தவொடனே நானு வண்டியே நிறுத்திப்புட்டு எறங்கி ஒடியாந்துட்டேனுங்க” என்றான்.

சுந்தரமூர்த்தி முதலியார், “சரி, நல்ல காரியம் செய்தாய், இனி அவர்கள் ஆயிரம் தடவை கேட்டாலும் முன்னுக்குப்பின் விரோதமில்லாமல் இதேமாதிரி நீ சொல்லிவிட வேண்டும்; இல்லாவிட்டால், நீ அகப்பட்டுக்கொள்வாய். அதுவுமில்லாமல், நீ இன்னொரு சங்கதியையும் மறக்காதே. நான் பாலத்தின் மேலே இருந்து உன்னைக் கூப்பிட்டபோது, நீ ஒரு சங்கதி சொல்லிக்கொண்டே மேலே வந்தாயல்லவா, அதுபோலவே, உனக்கு மயக்கம் வந்துவிட்டதென்றும், வண்டி இன்ன இடத்திற்குப் போகிறதென்பதே தெரியாமல் போய்விட்டது என்றும் நீ சொல்லிவிடவேண்டும். அப்படிச் சொல்லாவிட்டால், நீ ஏதோ கெட்ட எண்ணத்தோடு வேண்டுமென்றே இந்த அம்மாளைத் தெற்குத் திக்கில் இவ்வளவு தூரம் கொண்டுவந்தாய் என்று உன்மேல் குற்றம் சுமத்துவதோடு, அந்த அம்மாளுக்குத் தற்செயலாய் இப்போது ஏதாவது அபாயம் நேர்ந்திருந்தாலும், அதற்காகத்தான் நீ அழைத்துக்கொண்டு வந்திருப்பாயென்று