பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 செளந்தர கோகிலம்

“ஐயா! எல்லோரும் தயவு செய்து கொஞ்சம் நிதானியுங்கள். நாம் பெரிய மனிதர்களாயிருந்தும் இப்படிக் கேவலமாகச் சண்டை போடுவது விகாரமாக இருக்கிறது. நாம் கிரமப்படி எதையும் செய்வோம். அம்மா செளந்தரவல்லி! இந்தப் பொன்னுரங்க முதலியார் இன்று காலையில் உங்களுக்கு அனுப்பிய கடிதம் இப்போது எங்கே இருக்கிறது? அதை எடுத்துவர முடியுமா?’ என்றார்.

செளந்தரவல்லி அந்தக் கடிதத்தை தான் அப்பொழுது வெளிப்படுத்துவது உசிதமல்லவென்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு சீனிவாச முதலியாரை நோக்கி, ‘அந்தக் கடிதத்தை நான் அம்மாளுடைய மேஜையின் மேலிருந்து எடுத்து வந்து மடியில் சொருகிக் கொண்டிருந்தேன். ஆனால் அதை நான் படிக்கவில்லை. கடிதம் என் அறையில் எங்கேயோ நழுவி விழுந்து விட்டது. அதைத் தேடி எடுத்துக்கொண்டு வரும்படி ஒரு வேலைக்காரியை அனுப்பி வைத்திருக்கிறேன். அவள் வந்தவுடன் கடிதத்தை இந்த ஐயாவுக்குக் காட்டுவோம். அதற்குள் விஷயத்தை நன்றாகத்தான் இந்த ஐயாவுக்குச் சொல்லுங்களேன். இவர்களும் பொய் பேசக் கூடியவர்களல்ல. இவர்கள் தக்க பெரிய மனிதர்கள். இவர்கள் எழுதியதுபோல வேறே யாராவது பொய்க் கடிதம் எழுதியனுப்பினாலும் அனுப்பி இருக்கலாம்” என்றாள்.

அதைக்கேட்ட சிலர், “அப்பொழுது கோகிலாம்பாளும், அம்மாளும் இவருடைய வீட்டுக்குப் போனதும் பொய்யாக இருக்க வேண்டுமே” என்றனர்.

செளந்தரவல்லி, “அப்படியும் இருக்கலாம். அம்மாளுக்குத் தான் இப்பொழுது புத்தி சுவாதீனத்தில் இல்லையே” என்றாள். அதைக்கேட்ட சீனிவாச முதலியார், ‘அம்மாளுக்குப் புத்தி சுவாதீனமில்லாமல் போனது இப்பொழுது கால் நாழிகையாக வல்லவா? அதற்கு முன் உங்களிடம் பேசிய போதெல்லாம் சரியான நிலைமையில்தானே இருந்தார்கள். இருக்கட்டும். உன் இஷ்டப்படி விஷயத்தை நான் இவரிடம் சொல்லுகிறேன். ஐயா! பொன்னுரங்க முதலியாரே! இந்த வீட்டு எஜமானியம்மாளிடம் ஏதோ அவசரமான ரகஸிய சங்கதிகளைச் சொல்ல வேண்டு மென்றும், அவர்கள் உடனே புறப்பட்டு நேரில் உம்முடைய