பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 25i

போலிருக்கிறதே! உனக்கு மாத்திரந்தான் அது தெரியாதா. அம்மாள் முதலிய மற்ற எவருக்குமே தெரியாதா என்பது தெரியவில்லையே! புஷ்பாவதியம்மாள் இப்போது நம்முடைய பங்களாவில் இருக்கிறார்களல்லவா? அவர்கள் உன்னிடம் எவ்விதமான தகவலும் தெரிவிக்கவில்லையா?” என்றாள்.

செளந்தரவல்லி, “அக்கா இன்று காலையில் எழுந்தபிறகு நான் வழக்கப்படி என்னுடைய ஜோலிகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். நீ பங்களாவை விட்டுப் புறப்பட்டு இன்று காலையில் எங்கேயோ போனாய் என்பதுகூட எனக்குத் தெரியாது. நீயும் அம்மாளும், புஷ்பாவதியும் ஒன்றாக இருக்கிறீர் களென்றே நான் நினைத்திருந்து விட்டேன். அதுவுமன்றி முக்கியமாக எனக்கு இன்றைய காலையிலிருந்து உடம்பு சரியாகவே இல்லை. நான் படுக்கையை விட்டு எழுந்து வெளியே வரவே இல்லை. சாப்பாட்டைக்கூட நான் படுக்கை யறைக்கே வரவழைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் துரங்கு வதும், கொஞ்ச நேரம் விழித்துக் கொண்டபடி படுத்திருப் பதுமாய் நான் என் படுக்கையறையிலேயே சாயங்காலம் ஆறு மணிவரையில் இருந்ததில், அதன் பிற்பாடு உடம்பு சரியான நிலைமைக்கு வந்தது. பூஞ்சோலை பக்கம் நடந்துபோய் விட்டு வர வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. நான் எழுந்து உள்ளே பார்க்கிறேன். யாரும் காணப்படவில்லை. நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு வேளை பூஞ்சோலைக்குத்தான் போயிருப்பீர்களோ வென்ற சந்தேகமும் உண்டாயிற்று. அதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் உடனே வேலைக்காரரைக் கூப்பிட்டு விசாரித்தேன். அப்போதுதான் எனக்கு எல்லாச் சங்கதியும் தெரிந்தது. திருவல்லிக்கேணியிலுள்ள நம்முடைய நெருங்கிய பந்துவொருவர் அம்மாளிடம் ஏதோ அவசரமான சங்கதி பேசவேண்டுமென்றும், அவர்கள் உடனே புறப்பட்டுவர வேண்டுமென்றும் கடிதம் எழுதி அனுப்பினாராம். அம்மாள் போக முடியவில்லையாம், உன்னை அனுப்பினார்களாம். அங்கே போன நீ மத்தியானம் நாலு மணிவரையில் திரும்பி வரவில்லையாம். அதன்மேல் அம்மாளுக்கு உன்னைப்பற்றிய கவலை உண்டாகிவிட்டதாம். உன்னைத் தேடிப் பார்த்து அழைத்துக் கொண்டு வருவதற்காக அம்மாளும் பங்களாவை