பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 28i

வேண்டுமென்றே கோகிலாம்பாள் தனக்குள் சமாதானம் செய்து கொண்டாள். அவ்வாறு அவள் தனக்குள் எண்ணமிட இரண் டொரு நிமிஷ காலமே பிடித்தது. தானும், தனது தாயும் கண்ணியம் வாய்ந்த அத்தனை ஜனங்களுக்கும் முன்னிலையில் அவ்வாறு விகாரமான நிலைமையிலிருந்தது அவளால் சகிக்க வொண்ணாத மகா சங்கடமான நிலைமையாக இருந்தது. அவ்வாறு தாம் அவமானத்திற்கு ஆளாவதும் அவளது மனத்திற்குச் சிறிதும் ஒவ்வாதிருந்தமையால், அந்தப் பெண்மணி அங்கிருந்த சொந்த ஜனங்களை நோக்கி நிரம்பவும் நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “ஒன்றுமில்லா சங்கதி இவ்வளவு தூரத்திற்கு வளரவும், தக்க பெரிய மனிதர்களான நம்முடைய சொந்த ஜனங்கள் ஒருவர் மேலொருவர் ஆத்திரமாகப் பேசிக் கொள்ளவும் காரணம் ஏற்பட்டதைக் காண என் மனம் தவிக்கிறது. இன்று காலையில் ஒரு முக்கியமான காரியமாக அம்மாள் என்னை ஒரிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அது இன்ன இடமென்று வேலைக்காரர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் அதைப்பற்றி மேன்மேலும் கேள்விகள் கேட்பார்கள். அவைகளுக்கு நாங்கள் சமாதானங்கள் சொல்ல வேண்டியிருக்கும். அல்லது, அதை அவர்கள் அன்னியரிடம் பிரஸ்தாபிப்பார்கள். அன்னியர்கள் அதைப்பற்றி மனம்போனபடி புரளி செய்து வம்பு வளர்ப் பார்கள். அதற்கெல்லாம் இடம் கொடுக்க எங்களுக்கு இஷ்டம் இல்லை. அதுவுமன்றி இந்தப் பங்களாவில் நாங்கள் நிச்சய தார்த்தம் நடத்த எத்தனித்த சமயத்தில் எங்களுக்கு அவமானம் நேரிட்டது எல்லோர்க்கும் தெரிந்த விஷயமல்லவா. அந்த துக்கத்தினால், வேலைக்காரர்களிடம் அவ்வளவு தாராளமாகக் குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேச எங்களுக்கு லஜ்ஜையாக இருந்தது. ஆகையால் நாங்கள் அவர்களிடம் உண்ம்ையான தகவலைச் சொல்லவில்லை. ஆகவே, என்னை ஓர் அவசர காரியமாய்ச் சொந்தக்காரருடைய வீட்டுக்கு அனுப்பி இருப்பதாக அம்மாள் சொல்லி இருக்கலாம்; எங்கே யாருடைய வீட்டுக்கு என்று யாராவது கேட்டதன்மேல் தடுக்க முடியாமல் யாராவது உறவினர் ஒருவருடைய பெயரை ஒப்புக்காகச் சொல்லி யிருக்கலாம். ராயபுரத்திலுள்ள பொன்னுரங்க முதலியார் ஐயாவின் வீட்டுக்கு நான் போனதாக அம்மாள் சும்மா சொல்லி