பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 செளந்தர கோகிலம்

வைத்தார்கள் போலிருக்கிறது. அவ்வளவே தவிர, நான் உண்மையில் அவர்களுடைய வீட்டுக்குப் போகவில்லை! வக்கீல் ஐயாவுடைய வீட்டுக்கும் போகவில்லை. அவர்களுள் எவர் பேரிலும் நாங்கள் எவ்விதமான குற்றமும் சுமத்தவில்லை. நான் இப்பொழுது வந்தவுடன் என் தங்கை செளந்தரவல்லியம்மாள் வந்து, “நீ திருவல்லிக்கேணியிலுள்ள நம்முடைய நெருங்கிய பந்து ஒருவர் வீட்டுக்குப் போனதாக வேலைக்காரர்கள் சொன்னார்களே. அந்த ஊரில் வக்கீல் ஐயாவைத் தவிர நமக்கு நெருங்கிய பந்து யாரும் இல்லையே; நீ அவர்களுடைய வீட்டுக்கா போயிருந்தாய்?” என்று கேட்டாள். வேலைக்காரர் களெல்லோரும் அவர்களுடன் கூட வந்திருந்தார்கள். அம்மாள் அப்படிச் சொல்லியிருந்தால், நான் அதைப் பொய்யாக்கக் கூடாதென்றும், பிற்பாடு தனிமையில் செளந்தரவல்லிக்கு உண்மையைச் சொல்லலாமென்றும் எண்ணி, ‘ஆம் அங்கேதான் போயிருந்தேன்” என்று சும்மா சொல்லி வைத்தேன். நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருப்பீர்களென்றாவது, இந்த உபயோக மற்ற பேச்சு இவ்வளவு பிரமாதமான அநர்த்தத்தை விளைவிக்கும் என்றாவது நானும் எதிர்பார்க்கவில்லை; அம்மாளும் எதிர்பார்த் திருக்க மாட்டார்கள். இதுதான் உள் மர்மம்.”

அதைக்கேட்ட செளந்தரவல்லி தனது அக்காளை நோக்கி, நயமாகப் புன்னகை செய்து சிநேகபாவமாய்ப் பேசுகிறவள் போல நடித்து, ‘ஒகோ! அப்படியா சங்கதி கண்டால் காமாட்சி நாயக்கர், காணாவிட்டால் பள்ளிப்பயல் என்றும், கண்டால் சாமி சாமி கானாவிட்டால் பாப்பான் என்றும் சிலர் நடந்து கொள்வ துண்டு. அதுபோல இருக்கிறது காரியம். சொந்தக்காரர் இல்லா விட்டால், அவர்களுடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுகிறது. அவர்கள் இருந்தால் அவர்களிடம் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்ளுகிறது. இந்த மாதிரி நியாயம் மூட ஜனங்களிடத்தில் இருக்கத் தகுந்ததென்றல்லவா நான் நினைத்தேன். நாகரீகம் கண்ணியம் முதலியவை வாய்ந்த நம்மைப் போன்றவர்களிடத்தில்கூட இந்த நியாயம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீ சொன்னதை அப்படியே உண்மை யென்று நினைத்து நான்கூட ஏமாறிப் போய் இங்கே வந்து அப்படியே சொல்லிவிட்டேன். அதனால் இப்போது நானல்லவா