பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 263

முட்டாளாகி விட்டேன். உண்மையான ஒரு சங்கதியை வெளி யிடாமல் மறைத்து வைப்பதுகூட அவ்வளவு உசிதமான ஒழுக்க மல்ல. இருந்தாலும், பிறருக்கு அதனால் அநியாயமான கெடுதல் நேரக்கூடியதாக இருந்தால், அதனால் மற்றவருக்குக் கெடுதல் நேராது என்ற நிச்சயம் இருந்தால், சில சந்தர்ப்பங்களில், உண்மையை மறைத்து வைக்கலாம். ஆனால், எப்படிப்பட்ட சந்தர்ப்பமாக இருந்தாலும், உண்மையை மாற்றி பொய்யான தகவல்களை மாத்திரம் உற்பத்தி பண்ணிச் சொல்வது கூடவே கூடாது. நீ இப்போது வக்கீல் ஐயாவின் பெயரை அநாவசியமாக இழுத்து விட்டாயே! இதனால் எவ்விதமான கெடுதலும் அவமானமும் நேருமென்று நீ எண்ணவே இல்லை. யாருக்கும் எவ்விதக் கெடுதல் செய்ய வேண்டுமென்றும் நீ கருதவில்லை, பின்னால் வேலைக்காரர்களுடைய அஜாக்கிரதையினால் நமக்குக் கெடுதல் வராமல் இருக்க வேண்டுமென்ற முன் எச்சரிக்கை யாகவே நீ இந்தக் கற்பனையைச் சொன்னாய். ! இப்பொழுது பிறருக்கும் நமக்கும் எப்படிப்பட்ட சங்கடத்தையும் அவமானத் தையும் உண்டாக்கிவிட்டது பார்த்தாயா?” என்று கணிர் கணிர் என மணியடிப்பது போல மொழிந்தாள்.

அதைக் கேட்ட கோகிலாம்பாள் தனது தங்கையின் ஒழுங்கான மனப்பான்மையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியும் * பூரிப்பும் கொண்டவளாய் அவளை நோக்கிப் புன்னகை புரிந்து, “செளந்தரா மனிதர் பட்டுப் பட்டுத்தானம்மா தேர்ச்சியடைய வேண்டும். நான் ஒன்றை நினைத்து, நிரம்பவும் புத்திசாலித்தன மாய் நடந்து கொள்வதாக எண்ணிக்கொண்டு, அப்படி சொல்லி விட்டேன். அது இப்படிப்பட்ட விபரீதத்தில் வந்து முடிந்தது. நீ என்னிடம் வந்து, திருவல்லிக்கேணியிலுள்ள வக்கீல் முதலியார் வீட்டுக்குத்தானே போயிருந்தாய்’ என்று கேட்டவுடனே என் பாடு கஷ்டமாகிவிட்டது. ஆம் என்று ஒப்புக் கொள்வது பொய். இல்லை என்றால் நீ விடமாட்டாய், மறுபடி கேள்வி கேட்பாய். பிற்பாடு தனிமையில் சொல்லுகிறேன் என்றால், வேலைக்காரர்கள் தங்களிடம் நான் அவ்வளவு நம்பிக்கைகூட வைக்கவில்லையே என்றும், நான் போகக்கூடாத இடம் எதற்கோ போனதாகவும் எண்ணிக் கொள்வார்கள். சில காரணங்களை முன்னிட்டு, நான் உண்மையை அவர்களுக்கு எதிரில் சொல்லப் பிரியப்படவில்லை.