பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 செளந்தர கோகிலம்

அதைக் கருதி நீ கண்ணியத்திற்குக் குறைவான செய்கையில் இறங்குவது ஒழுங்கல்ல. நீ பிடிவாதமாய் அந்த இடத்திலேயே வாழ்க்கைப்படுவேன் என்று ஒரே மூர்க்கமாகச் சொல்லிக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. உன் தங்கைக்குக் கலியாணம் ஆகவேண்டும். நீ இப்படிப்பட்ட தலைக்குனிவான காரியத்தைச் செய்தால், வேறே தக்க மனிதர் யாரும் உன் தங்கையைக் கட்டிக்கொள்ள முன் வரமாட்டார்கள். நமக்கு வேண்டிய மனிதர்களை ஆபத்துக் காலத்தில் கைவிடக்கூடாதென்பது நியாயமான காரியமே. அவர்களை நாம் கைவிட வேண்டாம். பணத்தினாலும் தேகப் பிரயாசையினாலும் நாம் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து நாம் கண்ணபிரான் முதலியாரை விடுவிக்கச் செய்வோம்; அந்த அம்மாளையும் தேடிப் பிடிப்போம்; இன்னம் அவர்களுக்கு ஏதாவது பொருளுதவியும் செய்வோம்; அவ்வளவேயன்றி, எவ்வளவோ கண்ணியமாக இருந்துவரும் நம்முடைய குடும்பங்களின் பெருமையைப் போக்கடிக்கும்படியான காரியத்தைச் செய்து, தீராத மானக்கேட்டையும் இழிவையும் நாம் தேடிக்கொள்வது சரியல்ல. அவர் உன்னை இரண்டு சந்தர்ப்பங்களில் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்றினார் என்பது உண்மைதான். அதைப்பற்றி நான் ஆக்ஷேபனை சொல்ல முடியாது. அவர் நம்முடைய சுயஜாதி மனிதரல்லவென்று வைத்துக்கொள்ளு வோம். அப்போது நீ அவரைக் கட்டிக்கொள்ள எண்ணுவாயா? மாட்டவே மாட்டாய். நம்முடைய மனசில் உண்டாகும் அபாரமான நன்றி விசுவாசத்தை நீ அப்போது வேறு வகையில் காட்டுவாய். அவருக்கு ஏராளமான சன்மானங்கள் கொடுப்பாய்; புகழ்ச்சி மொழிகளை உபயோகிப்பாய், வீட்டைக் கட்டிக் கொடுப்பாய், நிலத்தைக் கொடுப்பாய், அல்லது, அவருடைய கலியாணத்தையே நடத்தி வைப்பாய். அவ்வளவேயன்றி, இம்மாதிரிக் கல்யாண பிரஸ்தாபம் உண்டாகாது. அதுபோலவே, நீ இப்போதும் நினைத்துக் கொண்டு, உன் எண்ணத்தை மாற்றிக்கொள்வதே தகுதியான காரியம். துாஷணைக்கும் இழிவுக்கும் இலக்கான மனிதரை நமக்குச் சரியான ஜாதி மனிதரென்று நாம் எண்ணக்கூடாதல்லவா? அதுவுமன்றி, இப்போது நான் இருக்கிறேன். கொஞ்ச நேரத்திற்குமுன் உனக்கு