பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 செளந்தர கோகிலம்

தர்மமாகாது. காலையில் நடந்த தவறு தற்செயலாக நடந்தது என்றே நாம் எண்ணவேண்டும். இப்போது மினியன் கள் குடித்ததற்கு நானே உத்தரவாதி என்று சொல்லவேண்டும். இவன் உன்னுடைய காசாரியாகையால், நான் உன்மேல் வைத்துள்ள அபாரமான வாத்ஸல்யம் இவன் பக்கத்திலும் கொஞ்சம் திரும்பியது. அதனால், இவனுக்கு நான் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று இனாம் கொடுத்தேன். இவர்களிடம் பணம் கிடைத்தால் தான், உடனே கள்ளுக்கடையைப் பற்றிய நினைவைத் தவிர வேறு எந்த நினைவும் உண்டாகிறதில்லையே. இவன் உடனே நேராக அங்கே போய்விட்டு வந்திருக்கிறான். இவனுக்கு இன்னொரு நினைவும் இருந்திருக்கலாம். ஐயா அம்மாளிடம் இவ்வளவு ஆசையாக இருக்கிறார். ஆகையால், அம்மாள் சீக்கிரமாக இந்த இடத்தைவிட்டுப் போய்விடமாட்டார்கள் என்று நினைத்துத் தான் கொஞ்சம் மயங்கி பிரம்மாநந்த நிஷ்டையில் இருக்கலாமென்று எண்ணினான் போலிருக்கிறது. நீ இங்கே இருக்கப் பிரியப்படாமல் அவசரப்பட்டு இப்படிப் பறப்பாயென்று இவன் எண்ணவேயில்லை. அந்த விஷயத்திலும் இவன் என்மேல் கொஞ்சம் மதிப்புடையவன் என்றே நான் எண்ணுகிறேன். அதிருக்கட்டும். மினியன் பாலத்தண்டையில் உன்னை வண்டியோடு விட்டுப்போனானே. அதன் பிறகு உன் வண்டியை யார் ஒட்டிக்கொண்டு மயிலாப்பூருக்கு அப்பால் வரையில் போனது? அவ்வளவு தூரம் நீ எப்படி ரஸ்தாவைக் கவனிக்காமல் இருந்தாய்?” என்றார். -

உடனே கோகிலாம்பாள், “நான் வண்டியில் வந்தபோது என் மனம் எதையோ நினைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்தது. நான் வழியைக் கவனிக்கவில்லை. மினியன் திடீரென்று வண்டியை நிறுத்திவிட்டு, தனக்கு அடி வயிறு நோகிறதென்றும் பாலத்தடிக்குப் போய்விட்டு வருகிறேன் என்றும் சொல்லிவிட்டுப் போனது என் காதில் விழுந்தது. உடனே ஐந்து நிமிஷத்தில் அவன் திரும்பி வந்த மாதிரி இருந்தது. வந்த மனிதன் இவனைப்போலவே சட்டை நிஜார் தலைப்பாகை எல்லாம் அணிந்து கொண்டிருந்தான். மினியன்தான் திரும்பி வந்து வண்டியை ஒட்டிக்கொண்டு போகிறானென்று நான்