பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 செளந்தர கோகிலம்

ஒரு வேலைக்காரியை அழைத்து, ‘அம்மாள் சாப்பிடுவதற்காக என்னை அழைத்துவரச் சொன்னால், நான் சாப்பிட்டாய் விட்ட தென்றும், படுத்துத் தூங்குவதாகவும் சொல்லிவிடு. அவர்கள் சாப்பிட இலையில் உட்கார்ந்தவுடனே இங்கே வந்து என்னிடம் சொல்” என்று கூறி அவளை அனுப்பிவிட்டுச் சயனத்தில் மிகுந்த ஆவலோடு படுத்திருந்தாள். அதன் பிறகு அரை நாழிகைக் காலம் கழிந்தது. வேலைக்காரி மறுபடி அங்கே தோன்றி பூஞ்சோலை யம்மாளும் புஷ்பாவதியம்மாளும் இலையில் உட்கார்ந்து விட்டதாகக் கூறிவிட்டுச்சென்றாள். உடனே செளந்தர வல்லியம்மாள் மெதுவாக எழுந்து எவருக்கும் தெரியாமல் சந்தடி செய்யாமலும் தனது தாயின் விடுதிக்குள் நுழைந்து மேஜைகள், பெட்டிகள் முதலியவற்றை ஆராய்ந்து பார்த்து, பூஞ்சோலை யம்மாளால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணபிரானது கடிதத்தைக் கண்டு பிடித்து அதை எடுத்து இடையில் சொருகி மறைத்துக்கொண்டு, தான் அந்த இடத்திற்கு வந்த குறிப்பே தெரியாதபடி எல்லாவற்றையும் பழையபடியே வைத்துவிட்டு விரைவாக நடந்துவந்து தனது சயனத்தையடைந்து முன்போலப் படுத்துக்கொண்டாள். அவ்வாறு தான் போய்க் கடிதத்தை எடுத்து வந்ததை எவரும் பார்க்கவில்லையென்று நிச்சயித்துக் கொண்டு அதனால் நிரம்பவும் களிப்படைந்த நிலைமையில் செளந்தரவல்லியம்மாள் கட்டிலடங்காத ஆவலோடும் பதைப் போடும் கண்ணபிரானது கடிதத்தைப் பிரித்துப் பார்க்கலானாள். (அந்தக் கடிதத்தின் விஷயம் இக்கதையின் முதல் பாகத்தில் பூர்த்தியாக வெளியிடப்பட்டிருக்கின்றது.)

கடிதத்தைப் படித்த செளந்தரவல்லியம்மாள் அளவற்ற வியப்பும் ஆத்திரமும் அடைந்தாள். “ஆகா! அப்படியா சங்கதி! ஊர்ச் சொத்தைக் கொள்ளையடித்து மானபங்கப்பட்டுச் சிறைச் சாலையில் அடைபட்டிருக்கும் இந்த மனிதப் பதர் கோகிலாம் பாளைச் சிறைச்சாலைக்கு வரும்படி எழுதியிருக்கிறானே! ஆகா! இவனுக்கு எவ்வளவு ஆணவமும் செருக்கும் உண்டாகிவிட்டன: எங்கள் யோக்கியதை என்ன! எங்களுக்கு இருக்கும் அபாரமான செல்வமென்ன!. இவன் யார்? எங்கள் வீட்டில் கேவலம் ஒரு சேகவகன் வேலைசெய்வதற்குக்கூட இவனுக்கு யோக்கியதை