பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 95

ஒருவித மனக்கிலேசம் எழுந்து அவளை வதைத்தது. ஆனாலும், அவள் சந்தர்ப்பத்தைக் கருதி அவருக்கு உடனே மறுமொழி கூறத்தொடங்கி, “செளந்தரவல்லியம்மாள் இப்போது பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள்’ என்றாள்.

அதைக்கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் நிரம்பவும், வேதனைப்படுகிறவர் போலத் தமது குரலை மாற்றிக்கொண்டு, “ஆகா! கட்டிலின்மேலா உட்கார்ந்துகொண்டிருக்கிறாள்! நானும் வந்து அந்தக் கட்டிலில் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அவளோடு குழந்தைபோல விளையாடிக் கொஞ்ச வேண்டுமென்று என் மனம் துடிக்கிறது. என் உடம்பு பறக்கிறது. இங்கே இருந்து அந்த இடம் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. இந்தத் துாரத்தை நான் மந்திர சக்தியினால் இதே கூடிணத்தில் கடந்து அங்கே வந்து விட முடியுமானால், அப்படியே செய்வேன். ஆனால், அங்கே அவள் தாயார் முதலியோர் இருப்பார்கள். ஒருவேளை அதிர்ஷ்ட வசத்தினால் அவர்கள் யாரும் இல்லையென்று வைத்துக்கொண்டாலும், என் எஜமானியம்மாளின் மனநிலைமை அதற்கு இடங்கொடுக்குமோ கொடுக்காதோ. நான் வந்து கட்டிலின் பக்கத்தில் உட்கார்ந்தவுடன் எவனோ திருடன் வந்துவிட்டான் என்று என்னைப் பிடித்து, செளந்தரவல்லி போலீசாரிடம் ஒப்புவித்து விடுமோ என்னவோ?’ என்று அளவற்ற களிப்பும், ஆவலும் மனவேதனையும் காட்டிப் பேசினார்.

அதைக் கேட்கவே, செளந்தரவல்லியின் நிலைமை சகிக்க வொண்ணாததாகி விட்டது. அதற்கு முன்னரே அந்த மடந்தை தான் எப்போது தனிமையில் வரவழைத்துப் பேசி இன்பமுறலாம் என்றும், அவர் அதற்கு இணங்குவாரோ மாட்டாரோவென்றும் நினைத்துப் பெரிதும் ஆவல் கொண்டு. ஏங்கித் தவித்திருந்தாள். ஆதலால், அவர் கூறிய சொற்கள் அவளுக்கு முற்றிலும் ஹறிதமாகவும் அமிர்த வருஷம்போலவும், அவளை இன்பக் கடலில் ஆழ்த்துவதாகவும் இருக்கவே, அவள் அப்படியே பிரம்மாநந்த சுகத்தில் லயித்துப்போய் அவரை நோக்கி, ‘அவளும் உங்களுடன் தனிமையில் பேசவும், உங்களோடு கொஞ்ச நேரமாவது சந்தோஷமாக இருக்கவும் ஆவல்கொண்டு